ரோபோட்களை வடிவமைத்து அசத்தும் சிறுவன் சாரங் சுமேஷ்.! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ரோபோட்களை வடிவமைத்து அசத்தும் சிறுவன் சாரங் சுமேஷ்.!

இன்றைய இந்தியாவில் இளம் தலைமுறையினர் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு சொந்தகாரர்களாக இருக்கின்றனர்.
மேலை நாட்டு கண்டுபிடிப்புகளுக்கும் சற்றும் குறையாத வகையில், இந்திய இளைஞர்களின் கண்டுபிடிப்புகள் இருக்கின்றன.




இன்று கண்டுபிடிப்புகளுக்கு மூத்த வயது, நடுத்தர வயது, சிறுவன் என்று எல்லாம் பாகுபாடு கிடையாது. வயதுக்கு கிடைப்பது கண்டுபிடிப்பு இல்லை அவர்களின் அனுபவத்திற்கும் அறிவிக்கும் கிடைக்க கூடியது தான் கண்டுபிடிப்பாக இருக்கின்றது.
தற்போது இந்தியாவில் அதுவும் 4 வயது முதல் சிறுவன் சுமேஷ் என்பவன் தினசரி சந்திக்கும் பிரச்னைகளில் இருந்து ரோபோட்டை வடிவமைத்து சாதனை படைத்துள்ளான்.
ஏராளமான ரோபோட்டுகளையும் பல்வேறு தேவைகளுக்கு தகுந்தார் போல் வடிவமைத்து சாதனை படைத்துள்ளான். சிறுவதிலேயே பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு சொந்தகாரனாகவும், சாதனையாளராகவும் திகழ்கின்றான்.
மாணவன் சாரங் சுமேஷ்பை பார்க்கும் போது நமக்கு கருவிலே திருவுடையாராக இருப்பாரோ என்று தான் தோன்றுகின்றது.
சிறுவயதில் ஸ்மார்ட் பெல்ட் திட்டத்தில் வேலை:
சிறுவன் சாரங் சுமேஷ் கொச்சியை சேர்ந்தவர். சுமேஷ் கடந்த ஓராண்டு முன் ஸ்மார்ட் பெல்ட் திட்டத்தில் வேலைக்கு சேர்ந்தார். சிறுவயதிலேயே விதவிதமான ரோபோட்களை வடிவமைக்கும் தன்மை கொண்டவர். இன்று சுமேஷ்க்கு எட்டு வயது ஆகின்றது.

முதல் ரோபோட் கண்டுபிடிப்பு:
சுமேஷ் தனது வயதில் முதல் ரோபோட்டை வடிவமைத்தார். தினசரி வாழ்கையில் நடக்கும் பிரச்னைகளில் இருந்தே இந்த கண்டுபிடிப்புகளை அரங்கேயுள்ளார்.
கொச்சியில் உள்ள ஒரு பள்ளியில் சிறப்பு கண்டுபிடிப்பு ஆய்வம் இருக்கின்றது. இந்த ஆய்வகத்திற்கு சென்று தனது அசாதாரண திறமையால், இளை ரோபோட் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார் சுமேஷ்.

ஸ்மார்ட் சீட் பெல்ட் திட்டம்:
4 சக்கர வாகனத்தில் வாகனத்தில் நாம் அமர்ந்து பயணிக்கும் போது, நாம் சீட் பெல்ட் பயன்படுத்தும் போது, விபத்து ஏற்பட்டால் அது நம்மை காக்கும்.
அந்த விபத்தில் நாம் சிக்கிய போது, சீட்பெல்ட் மாட்டிக்கொண்ட போது, தீ விபத்து ஏற்பட்டாலே அல்லது, தண்ணீரில் நாம் மூழ்கி விட்டாலோ அதில் இருந்து அவ்வளவு எளிதாக தப்பிக்க முடியாது.
இதையொட்டி சிறுவன் சுமேஷ் ஸ்மார்ட் பெல்ட் திட்டத்தில், நாம் சீட் பெட்ல் அணிந்து கொண்டு பயணிக்கும் போது, அதில் உள்ள சென்சார் மற்றும் அலாரன்கள் நம்மை காக்கும்.
விபத்துகளின் தன்மைக்கு ஏற்ப கீழே விழாமலும், நெருப்பு ஏற்பட்டால், தண்ணீரில் மூழ்கினால் நம்மை அலராம் ஒழித்து விழிப்படைய செய்யும். மேலும் அப்போது ஆபத்துகளில் இருந்து தப்பிக்க சீட் பெல்ட்டையும் அது தானாக விடுவிக்கும்.

சிறுவனுக்கு உதித்த ஐடியா:
இந்த ஸ்மார்ட் பெல்ட்டை கண்டுபிடிக்க முக்கிய காரணம் பள்ளி வாகனம் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இது எப்படி விபத்து நடந்தது என்று சுமேஷ் தனது பெற்றோர்களுடன் விவாதித்தார். இதன் பிறகே ஸ்மார்ட் பெல்ட்டையும் அவர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
மேலும் தனது பள்ளி மாணவர்களுக்கும் இதை கண்டுபிடித்து அவர்களுக்கு கொடுத்துள்ளார்.

சிறுவனின் பல்வேறு கண்டுபிடிப்புகள்:
1. பார்வையற்றவர்களுக்கு நடை பயிற்சி குச்சி.
2. ரோபோ கை.
3. டிரை சைக்கிள்.
4. லீகோ கால்குலேட்டர்.
5. ஜிடிட்டல் கடிகாரம்.
6. கை வேக விளையாட்டு.
7. துப்பாக்கி சூடுகளை தாங்கும் மனித போபோட்.
8. லீகோ என்எஸ்டி ரோபோட் மாடல்கள்.
9. ராஸ்பெரியை பிஐயை பயன்படுத்தி அர்டினோ புரொஜெக்ட்.
10. கிளீன் ரோபோட்.
11. ஸ்மார்ட் சீட் பெல்ட்.

இளைய ரோபோ தயாரிப்பாளரின் சாதனைகள்:
கொச்சியில் டெக் போஸ் 2K16 என்ற அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் அவர் வடிவமைத்த மூன்று ரோபோட்களை காட்சி படுத்தினார். இதை ஏராளமானோர்களின் பாராட்டையும் பெற்றார்.
சேர் வொட் எண்ட்டில் குசத், டெக்ஹோஸ், டெக் போஸ், மேக்கர், பெஸ்ட் உள்ளிட்ட ஏராளமான தொழில் நுட்ப விழாக்களிலும் சுமேஷ் கலந்து கொண்டார்.
அகமதாபாத்தில் நடந்த மேக்கர் பீஸ்ட் மற்றும் கோவையில் நடந்த லீகோ லீக் உள்ளிட்ட போட்டிகளிலும் பங்கேற்று தேர்வானார்.

அமெரிக்காவிலும் காட்சிபடுத்தினார்:
சாரங் சுமேஷ் கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவில் சில்சான் பள்ளத்தாக்கு பகுதியில் மிகப் பெரிய மேக்கர் பேயரில் கண்காட்சி நடந்தது. இதில் இவரின் கண்டுபிடிப்புகளை கண்காட்சிக்கு வைத்தார்.
சிறுவயத்தில் இத்தனை கண்டுபிடிப்புகளுக்காகவும் அவரை அமெரிக்காவும் பாராட்டியது.
நன்றி: TEDX

சிறந்த பேச்சாளர்:
அவர் 2016 ஆம் ஆண்டில் TEDX இல் இளைய பேச்சாளராக இருந்து வருகின்றார். மாணவர்களுக்கு பல்வேறு அறிப்பு பூர்வமான கண்டுபிடிப்புகளையும் ஊக்கு விக்கும் விதமாகவும் அவர் பேசி வருகின்றார்.

No comments:

Post a Comment

Please Comment