நவம்பர் 14, இன்றைய தினம் நம் நாட்டில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பாக டூடுள் போட்டிருக்கிறது.
ஆண்டுதோறும் நவம்பர் 14-ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவை நினைவு கூறும் வகையில் இன்றைய தினம் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
1964-ல் மே 27-ம் தேதி நேரு மறைந்தார். அவர் மறைவுக்குப் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் அவரது பிறந்தநாளை பால் திவஸ் அதாவது குழந்தைகள் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
தேசம் முழுவதும் பள்ளிக் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகளும் அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
மும்பை சிறுமி வரைந்த டூடுள்:
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் நடத்திய போட்டியில் மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒரு வெற்றி பெற்றுள்ளார். நீங்கள் கூகுளில் இன்று பார்க்கும் அந்த டூடுள் பிங்ளா ராகுல் என்று மாணவி வரைந்தது.
இந்த ஆண்டு போட்டிக்கான கருவாக என்னை ஊக்குவிப்பது எது? (What inspires me?)என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. பிங்ளா, விண்வெளியை தொலைநோக்கு கருவி வாயிலாக பார்க்கும் ஒரு சிறுமியையும் GOOGLE என்ற வார்த்தையில் உள்ள ஒவ்வோர் எழுத்தும் விண்வெளி சார்ந்ததாக இருக்கும்படியும் தீட்டியிருந்தார்.
ட்விட்டரில் இன்று இந்தியளவில் முதல் மூன்று இடங்களில் #ChildrensDay #JawaharlalNehru #RememberingNehru போன்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின்றன.
No comments:
Post a Comment
Please Comment