புதுச்சேரி அறிவியல் இயக்கம், பள்ளிக் கல்வித்துறையின் மாநில பயிற்சி மையம் சார்பில், 26வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு "அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பசுமையான மற்றும் ஆரோக்கியமான தேசத்திற்கான கண்டுபிடிப்புகள்" என்ற தலைப்பில் நடந்தது.மாவட்ட அளவில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட ஆய்வுத்திட்டங்கள் மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு, அவற்றில் இருந்து 26 ஆய்வுத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு, அகில இந்திய மாநாட்டுக்கு, தேர்வு செய்யப்பட்ட ஆய்வுத்திட்டங்களை சமர்ப்பித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில பயிற்சிமைய சிறப்பு அலுவலர் வெற்றிவேல், விரிவுரையாளர் ராஜேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஹேமாவதி, ரவிச்சந்திரன், முனை வர் அருண் நாகலிங்கம், சந்திரசேகரன், தட்சணாமூர்த்தி, பவித்ரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.அபிஷேகப்பாக்கம், சேத்திலால் அரசு பள்ளியின் 'வாய் பற்றிய நோய்களை ஆராய்தல் மற்றும் அதற்கான தீர்வை பாரம்பரிய முறையில் கண்டறிதல்' ஆய்வுத் திட்டம், அமலோற்பவம் மேனிலைப்பள்ளியின் 'கிழிந்த காகிதங்களை கொண்டு இயற்கை பூச்சி விரட்டி தயாரித்தல்', காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர் நிலைப் பள்ளியின் 'காட்டேரிக்குப்பம் கிராமத்தில் மாணவர் மற்றும் பொதுமக்கள் திறந்த வெளி கழிவறை பழக்கம் பற்றிய ஆய்வு', காரைக்கால் எஸ்.ஆர்.வி.எஸ். மேனிலைப் பள்ளியின் 'பீசோ மின்சார முறையில் ஆற்றல் கண்டறிதல்', பனித்திட்டு, அரசு நடு நிலைப் பள்ளியின் 'ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள்', மாஹே பள்ளியின் 'சுற்றுச்சூழலுக்கு பயன்தரும் தாவர கடல்சார் பாசிகள்' ஆகிய 6 ஆய்வுத்திட்டங்கள் ஒரிசா தலை நகர் புவனேஸ்வரில், நடைபெற உள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க உள்ளன.
No comments:
Post a Comment
Please Comment