அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை ஐந்தாவது ஆண்டாக அதிகரிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை ஐந்தாவது ஆண்டாக அதிகரிப்பு


அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 5.4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 1,86,000 ஆக இருந்த இந்திய மாணவர்கள் எண்ணிக்கை இந்தாண்டு 1,96,271 ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் நாடுகளுக்கு இடையே பயணித்து, மேற்படிப்பு படிப்போர் எண்ணிக்கை தொடர்பாக சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 





'கடந்த ஐந்தாண்டாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுககு சென்று மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி தான் உள்ளது. சிறிதளவு கூட குறையவில்லை. மற்ற நாட்டு மாணவர்களை ஒப்பிடும் போது இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் சர்வதேச மாணவர்களில் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 18 சதவீதம். இது கடந்தாண்டுகளை விட அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டாக சீன மாணவர்கள் முதலிடத்தில் இருந்தனர். ஆனால், அவர்களை இந்திய மாணவர்கள் பின்னுக்கு தள்ளி உள்ளனர். 


இது மட்டுமின்றி, அமெரிக்க மாணவர்கள் எண்ணிக்கையும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் அதிகரித்து உள்ளது. கடந்தாண்டை விட, இந்தாண்டு 12.5 சதவீதம் அதாவது, 4704 மாணவர்கள் அதிகரித்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க இந்திய கல்வி பவுண்டேஷன் சார்பில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் தூதரக விவகாரத்துறை ஆலோசகர் ஜோசப் பேம்பர் இந்த ஆய்வு அறிக்கையை சுட்டிக்காட்டி பேசியதாவது: 
கடந்த பத்தாண்டுகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்தால், இந்்தியர்கள் அமெரிக்கா சென்று படிப்பது இரு மடங்காக அதிகரித்துள்ளது. மிக உயர்ந்த படிப்புகளை படிக்க இந்திய மாணவர்கள் விரும்புகின்றனர். அதை தேடி தான் அவர்கள் செல்கின்றனர். அப்படிப்பட்ட கல்வியை அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தந்து வருகின்றன. அமெரிக்க பல்கலைக்கழகங்களை எடுத்து கொண்டால், இந்திய மாணவர்கள் விண்ணப்பிப்பது ஆண்டு தோறும் அதிகரித்தபடி தான் உள்ளது. இதில் எந்த வித தொய்வும் காணப்படவில்லை. அப்படிப்பட்ட மாணவர்களை அமெரிக்கா வரவேற்க காத்திருக்கிறது. அவர்களுக்கு எந்த பிரச்ைனயும் இருக்காது. அவர்கள் விண்ணப்பிப்பது முறையாக பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்படும். என்றார்.

No comments:

Post a Comment

Please Comment