குளிர்சாதனப் பெட்டியில் முட்டையை வைக்கக்கூடாது ஏன்...? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குளிர்சாதனப் பெட்டியில் முட்டையை வைக்கக்கூடாது ஏன்...?

உணவுப்பொருள்கள் பாதுகாப்பாக இருக்கும் என நம்பி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் உணவே நஞ்சானால் என்ன செய்வது? ஒரு காலத்தில் ஆடம்பரத் தேவையாக இருந்த குளிர்சாதனப் பெட்டி, தற்போது மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது. இன்றோ மீதமான உணவுகளைப் பாதுகாக்கவே பயன்படுத்துகிறொம்.



 வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடும் உணவு கள் உண்மையில் ஆரோக்கியமானவை தானா? எந்தந்த உணவுப்பொருட்களை எத்தனை நாள் வைக்க வேண்டும்? நாம் எப்போதும்ஒரு டஜன் முட்டையை வாங்கி குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது ஏறக்குறைய எல்லார் வீட்டிலும் வழக்கம். ஆனால் அப்படி முட்டைகளை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக் கூடாது என புதிய ஆய்வு கூறுகிறது.முட்டைகளில் விரைவில் பாக்டீரியா தொற்று உண்டாகிவிடும் அபாயம் உள்ளது.


 குறிப்பாக வயிற்றிற்கு கேடு விளைவிக்கும் சால்மோனெல்லா வகை பேக்டீரியா முட்டைகளின் ஓடுகளில் உருவாகும். கோழி முட்டையிடும்போது அதன் ஓடுகளில் சால்மோனெல்லா பேக்டீரியாக்கள் உருவாவது இயல்பானது. பேக்டீரியாக்கள் கொண்ட முட்டைகளை நாம் வாங்கியவுடன் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறோம்.




இது சால்மோனெல்லா பேக்டீரியா வளர தட்ப வெப்ப நிலை சாதகமாக குளிர்சாதனப் பெட்டி தருகிறது. மிகவும் குளிர்ந்த ஈரப்பதம் உடைய தட்ப வெப்ப நிலையில் சால்மோனெல்லா பலமடங்கு பெருக்கம் செய்ய ஏதுவாக இருக்கிறது. இருமடங்கு பெருகுகிறது.




சாதாரண அறைவெப்பத்தில் (37டிகிரி) இந்த பேக்டீரியா இனப்பெருக்கம் செய்ய முடியாது.



அவை இறந்துவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பேக்டீரியா சாதரண வெப்ப நிலையில் உயிர் வாழ்வதில்லை. அதிக ஈரப்பதம் கொண்ட குளிர் நிலையில் மிக விரைவில் பெருக்கமடைகின்றன. இதனால் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.


வாரக்கணக்கில் காய்கறிகளை வாங்கி ஃப்ரிட்ஜில் அடைத்து வைக்கக்கூடாது. ஃப்ரிட்ஜை வாரம் ஒரு முறை டீஃப்ராஸ்ட் செய்ய வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள், புற்றுநோய்க்கு கீமோதெரபி எடுத்துக்கொள்பவர்கள், ஹெச்ஐவி வைரஸ் தாக்குதல் உள்ளவர்கள் பதப்படுத்திய உணவுகளை சாப்பிடக்கூடாது. ஃப்ரெஷ்ஷாக சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment

Please Comment