எல்லா வங்கிகளிலும் ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட் திறக்கலாமா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

எல்லா வங்கிகளிலும் ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட் திறக்கலாமா?

வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையினை நிர்வகிக்கவே தனியாக சம்பாதிக்க வேண்டும் போல... இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட் சரியான தீர்வு. எனவே, ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட் குறிந்து தெரிந்துக்கொள்ளுங்கள்... ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட்டை அனைத்து இந்தியாவின் முக்கிய அரசு மற்றும் தனியார் வங்கிகளில் திறக்கலாம். அதேபோல் ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட்டை யார் வேண்டுமானால் திறக்கலாம்.


 ஜிரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கை திறக்க பணம் ஏதும் தேவையில்லை. குறைந்தபட்ச இருப்பு தொகையினை நிர்வகிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தனிநபர் கணக்கு, ஜாயிண்ட் கணக்கு போன்ற சேமிப்பு கணக்கு சேவைகள் அனைத்தும் ஜிரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கில் கிடைக்கும். அனைத்து வகை சேமிப்பு கணக்குகளுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் கிடைக்கும்.




ரூபே டெபிட் கார்டு வேண்டும் என்றாலும் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால், விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளுக்கு ரூ.10 முதல் 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஜிரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கிற்கும் இணையதள வங்கி சேவை அனுமதிகள் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜிரோ பேலன்ஸ் வங்கி கணக்கை மூட சில வங்கிகளில் கட்டணம் வசூலிக்கப்படும். குறிப்பு: ஜிரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கை வைத்துள்ளவர்களால் அதே வங்கி நிறுவனத்தில் வேறு சேமிப்பு கணக்கை திறக்க முடியாது. பிற சேமிப்பு கணக்குகள் திறந்தால் 30 நாட்களுக்குள் ஜிரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கை மூட வேண்டும்.

No comments:

Post a Comment

Please Comment