தமிழக அரசின் புயல் நிவாரண பணிகளுக்கு நிதி வழங்குங்கள் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த நிவாரண நிதிக்கு 100% வரி விலக்கு உண்டு என்றும் தெரிவித்து உள்ளது.
கடந்த 15ந்தேதி தமிழகத்தை புரட்டிப்போட்ட கஜா புயலுக்கு நாகை மாவட்டம் உள்பட 8 மாவட் டங்கள் கடுமையாக சேதமடைந்து உள்ளன. குறிப்பாக டெல்டா மாவட்டம் வரலாறு காணாத பாதிப்புகளை சந்தித்து உள்ளது. இந்த பகுதிகளை பழையதுபோல சீரமைக்க பல ஆண்டுகள் தேவைப்படும் நிலையில் தற்போது தமிழக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
புயல் நிவாரண பணிகளுக்கு பல ஆயரம் கோடி ரூபாய்கள் தேவைப்படும் நிலையில், முதல் கட்டமாக தமிழக அரசு ரூ.1000கோடியை ஒதுக்கியிருப்பதாக அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் குடிமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தமிழக அரசு எடுத்து வரும் மாபெரும் நிவாரணம் மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள் மூலம் உதவ வேண்டும்.
தமிழக அரசால் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.
நன்கொடையாளர்கள் கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று வங்கி, டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH
மேலும், பொதுமக்கள் தங்களது நன்கொடையை குறுக்கு கோடிட்ட காசோலை, வங்கி வரைவோலை மூலம் கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்:
அரசு துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர்,
முதல்வர் பொது நிவாரண நிதி, நிதித்துறை,
தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம்,
சென்னை - 600009, தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல் முகவரி: dspaycell.findpf@tn.gov.in
Electronic Clearring System(ECS) மூலம் வங்கிக்கு நேரடியாக அனுப்ப வேண்டிய விவரம்:
வங்கி பெயர்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.
கிளை: தலைமைச் செயலகம், சென்னை - 600009.
சேமிப்பு கணக்கு எண்: 117201000000070.
IFSC: IOBA0001172,
CMPRF PAN: AAAGC0038F
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
Please Comment