சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வு டிசம்பர் 9ம் தேதி நடக்கிறது. தேர்வுக்கள் 92 நகரங்களில் நடக்கிறது.
2296 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தகுதியுள்ள நபர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் சிபிஎஸ்இ இணைய தளமான www.ctet.nic.in என்ற இணைய தளத்தில் இன்று வெளியாகிறது. இணைய தளத்தில் ஹால்டிக்கெட்டுகள் பெற முடியாதவர்கள் 30ம் தேதிக்குள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் உரிய ஆதாரங்களின் நகல்களை அனுப்பி பெறலாம்.
No comments:
Post a Comment
Please Comment