புதுக்கோட்டையில் இன்று புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு எஸ்ஆர்எம் குழுமம் சார்பில் நிவாரணப் பொருட்களையும் பாரிவேநதர் இன்று வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களைச் சேர்ந்த 650 மாணவ, மாணவிகள் எஸ்ஆர்எம் குழு பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர். இவர்களால் இதற்கு மேல் கல்விக் கட்டணத்தை செலுத்த இயலாது என்பதை உணர்ந்து, அவர்கள் கல்வியை முடிக்கும் வரை கல்விக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார்.
அதாவது, 650 மாணவர்களின் ஒட்டுமொத்த கல்விக் கட்டணமான ரூ.48 கோடி வசூலிக்கப்படாது என்றும், அதை பல்கலைக்கழகமே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கஜா புயல் பாதித்த பகுதிகளில் தென்னந்தோப்புகளை இழந்த விவசாயிகளுக்கு 25 ஆயிரம் தென்னங்கன்றுகள் வாங்கிக் கொண்டு வந்து வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
No comments:
Post a Comment
Please Comment