அக்கம் பக்கத்தை அறிய உதவும் கூகுளின் புதிய செயலி! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அக்கம் பக்கத்தை அறிய உதவும் கூகுளின் புதிய செயலி!


கூகுள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பயனர்கள் குழு இந்த ஆண்டு தொடக்கத்தில் புதிதாக அறிமுகப்படுத்திய நெய்பர்லி என்கிற செயலியின் விரிவாக்கத்தைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. 





இதன் மூலம் உள்ளூர் தகவல்களை அந்தந்த பகுதியை சேர்ந்த கூகுள் பயன்பாட்டாளர்கள் மூலமே பெற முடியும். கூகுள் நிறுவனமானது நெய்பர்லியை தேசிய அளவில் விரிவுபடுத்தி வருகிறது, முன்னதாக பெங்களூரு மற்றும் டெல்லி பயனர்களுக்காக இந்த செயலி தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது சென்னைக்கு வந்துள்ளது. 




அடுத்த சில வாரங்களில் ஹைதிராபாத், புனே, கொல்கத்தா, சண்டிகர், லக்னோ, இந்தூர் உள்ளிட்ட பிற நகரங்களும் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பயனர்கள் குழுவின் மூத்த தயாரிப்பு மேலாளரான போனர் கூறுகையில் "இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் இணையத்தைக் கொண்டு சேர்க்கக் கடமைப்பட்டுள்ளோம், அதற்காக உள்ளூர் தகவல்களை அதிகம் சேகரித்து வழங்க விரும்பினோம், அதன்படி ஆண்டின் துவக்கத்தில் 'நெய்பர்லி' செயலியை அறிமுகப்படுத்தி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் என்னென்ன நிகழ்வுகள் நடக்கின்றன என்பதைக் கண்டுபிடித்தோம். 





இந்த ஆய்வில் தங்களை சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை அறிய மக்கள் மற்ற நபர்களிடம் கேட்பதை அல்லது உரையாடுவதை விரும்புகிறார்கள் என்பதையும் கணக்கிட்டோம். அதே பகுதியை சேர்ந்த மற்றவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதை எளிதாக்க இந்த 'நெய்பர்லி' செயலியை உருவாக்கினோம். மேலும் இந்தியர்கள் அனைவருக்கும் இது கிடைக்க முயற்சித்து வருகிறோம்" என்றார். செயல் திறன்: ஒரே தட்டுதலில் அருகில் உள்ள அக்கம் பக்கத்தினரின் பரிந்துரைகளைப் பெறலாம்.ஒவ்வொரு முறை நெய்பர்லி செயலியை நீங்கள் திறக்கும் போதும், உங்கள் அக்கம் பக்கத்தினரிடமிரின் கேள்விகளைக் காணலாம்.நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டு அதற்குப் பதில் கிடைக்கவில்லை என்றால், அதே கேள்வியை மீண்டும் சிறந்த முறையில் எப்படிக் கேட்பது என்கிற ஆலோசனையைச் செயலி வழங்கும்.பிறரின் கேள்விகளுக்கு அதிகம் பதிலளிக்கும் நபரை 'பெஸ்ட் நெய்பர்' என்கிற நிலை வழங்கப்படும்.


மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான கேள்விகள் அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகள் குறித்த தகவல்களையும் இதன் மூலம் பெறலாம்.மாணவர்கள் இந்த செயலியில் இணைவதன் மூலம் தங்கள் பகுதியைச் சேர்ந்த பிற மாணவர்களிடம் கல்வி சார்ந்த கேள்விகளையும், சந்தேகங்களையும் தீர்த்துக்கொள்ளலாம்.


அண்ட்ராய்ட் 4.3 மற்றும் அதற்கு அடுத்த பதிப்புகளில் இயங்கும் அனைத்து ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களும் இந்த செயலியை உபயோகிக்கலாம். நெய்பர்லியை தங்களது நகரத்திற்குக் கொண்டு வரக் காத்திருப்பு பட்டியலில் இணைவதன் மூலம் பயனர்கள் தங்களது விருப்பத்தைப் பதிவு செய்யலாம். எனவே அக்கம் பக்கத்தினரைக் கண்டறிய தயாராகுங்கள்.

No comments:

Post a Comment

Please Comment