காமராஜர் விருதுக்கு 4 பள்ளிகள் தேர்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

காமராஜர் விருதுக்கு 4 பள்ளிகள் தேர்வு

கோவை மாவட்டத்தில் காமராஜர் விருதுக்காக 4 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் மறைந்த காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. 




இதையொட்டி மாவட்டம் தோறும் நான்கு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு காமராஜர் விருது, ரொக்கப் பரிசு வழங்கப்படும். பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, மாணவர் சேர்க்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட 25 தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு விருதுக்கான பள்ளிகள் தேர்வு செய்யப்படுகின்றன. அதன்படி இந்த கல்வியாண்டுக்கான பள்ளிகளைத் தேர்வு செய்யும் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து வட்டார அளவில் ஒரு தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர், ஆசிரியர் பற்றுநர் ஆகியோர் அடங்கிய 3 பேர் குழுவினர், பள்ளிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் பொள்ளாச்சி தென்குமாரபாளையம் தொடக்கப் பள்ளி, ராக்கிப்பாளையம் நடுநிலைப் பள்ளி, கணுவாய் உயர்நிலைப் பள்ளி, குனியமுத்தூர் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள் 





காமராஜர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளுக்கு முறையே ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம், ரூ.75 ஆயிரம், ரூ.1 லட்சம் வீதம் ரொக்கம் வழங்கப்படும். இந்த நிதியைப் பயன்படுத்தி பள்ளியின் கட்டமைப்பு வசதி, தற்காலிக ஆசிரியர் பணியிடம், இதர வசதிகளை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமே மேற்கொள்ளலாம். தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்கு விரைவில் விருது வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள். நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment