இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ VoWi-Fi (வாய்ஸ் ஓவர் வைபை) எனும் சேவையை முயற்சி செய்கிறது. புதிய வைபை சேவை அடுத்த சில மாதங்களுக்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ VoWi-Fi சேவையை சோதனை துவங்கியிருப்பதால் இதன் வெளியீடு விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோவின் வோ வைபை சேவை மத்திய பிரதேச மாநிலத்தில் சோதனை செய்யப்படுவதாக டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று ஆந்திர பிரதேசம், தெலங்கானா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களிலும் ரிலையன்ஸ் ஜியோ தனது VoWi-Fi சேவையை சோதனை செய்வது தெரியவந்துள்ளது. ஜியோ வைபை சேவையை பயன்படுத்தும் ஸ்கிரீன்ஷாட் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில் ஜியோ வைபை சேவை தெளிவாக தெரிகிறது. அந்த வகையில் ஜியோ விரைவில் VoWi-Fi சேவையை வெளியிடலாம்.
2019 ஆம் ஆண்டு வாக்கில் ரிலையன்ஸ் ஜியோ தனது VoWi-Fi சேவையை வணிக ரீதியில் வெளியிட திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்குகளில் மட்டும் இந்த சேவை வழங்கப்பட்டு அதன் பின் மற்ற நெட்வொர்க்குகளிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ஜியோபோன்களிலும் இந்த சேவை வழங்கப்படும்.
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.
நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment