ஹெல்மெட் இன்றி வாகனம் ஓட்டிய மாணவர்கள்; சிறப்பாக கையாண்ட ஆய்வாளர்; குவியும் பாராட்டுகள்...
பெரம்பலூரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய பள்ளி மாணவர்களிடம்10 திருக்குறள்களை எழுதிக் காட்டினால் அபராதம் எதுவும் இல்லை என்று கூறி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சமயோசிதமாக அவர்களை கையாண்டுள்ள நிகழ்வு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பெரம்பலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளரானநாவுக்கரசு நேற்று அப்பகுதியில் போக்குவரத்து வாகனங்களை கண்காணிக்கும்பணியில் ஈடுபட்டிருந்தார்.ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர்களை நிறுத்தி அபராதம் செலுத்துமாறு கூறி வந்தார். அந்த சமயத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் பிடிபட்டனர்.
அவர்கள் பள்ளி மாணவர்கள் என்பதால் அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கிவிட்டு, அபராதம் செலுத்துவதற்கு பதிலாக 10 திருகுறள்களை எழுதிக்காட்டி அதற்கான உரையையும் கூறுமாறு கேட்டார்.
தொடர்ந்து அந்த மாணவர்களும் திருக்குறளை எழுதிக்காட்ட, ஒரு ஆசிரியரைப்போல பிழைகளை சுட்டிக்காட்டினார்.பின்னர், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை வாங்கி வைத்துக்கொண்டு, அவர்களின் பெற்றோர்களை தொடர்புகொண்டு வரவழைத்தார்.அந்த மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி இல்லாமல் ஒருவரது வீட்டில் உள்ள இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வந்தது தெரிய வந்தது.
பின்னர் மாணவர்களுக்கு அறிவுரை கூறிஅனுப்பி வைத்தார்.
வழக்கமாக யாராவது மாட்டினால் அபராதம் அல்லது அதற்கு 'மேலும்' வாங்கும் போக்குவரத்து ஆய்வாளர்கள் மத்தியில் இவரின் செயல் மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளது. மேலும் இவரது புகைப்படம், வீடியோசமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பல்வேறு தமிழ் ஆசிரியர்களும் இவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இவர் பெரம்பலூரில் சாலைவிபத்துக்களை தடுக்கும் பொருட்டு குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்தி வருகிறார்.

இதுவரை 5 குறும்படங்களை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு முன்னதாகவே அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Please Comment