Selfie எடுப்பதால் வரும் நோய் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Selfie எடுப்பதால் வரும் நோய்

செல்ஃபி எடுப்பதால் வரும் நோய்!- டிஜிட்டல் உலகின் புதிய பிரச்சினை




அடிக்கடி செல்ஃபி எடுப்பதால் மணிக்கட்டில் பாதிப்பு ஏற்பட்டு செல்ஃபி ரிஸ்ட் (Selfie Wrist - Carpal tunnel syndrome) என்ற நோய் பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.





கல்யாண வீடு தொடங்கி இறுதி ஊர்வலம் வரை இடம், பொருள், ஏவல் பாராமல் எடுக்கப்படும் செல்ஃபி பற்றி தினமொரு செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில் டென்மார்க் நாட்டின் கோப்பென்ஹேகன் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.




செல்ஃபி ரிஸ்ட் என்பது மணிக்கட்டை உள்புறமாக வளைத்து திருப்புவதால் மணிக்கட்டில் ஏற்படும் ஒருவித வலியாகும்.
இது தொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் சேனல், "அண்மைக்காலமாக மருத்துவர்கள் பரவலாக செல்ஃபி ரிஸ்ட் பாதிப்புடன் வந்த நபர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
இதுதவிர செல்ஃபி எடுக்கும்போது பாறைகளில் இருந்து கீழே விழுந்து மணிக்கட்டில் காயம் பட்டவர்களுக்கும் அதிகமாக சிகிச்சை அளித்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளது.




2018-ல் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் கடந்த அக்டோபர் 2011 முதல் நவம்பர் 2017 வரையிலான காலகட்டத்தில் 259 பேர் செல்ஃபி எடுக்கும்போது விபத்தில் சிக்கி இறந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

No comments:

Post a Comment

Please Comment