ஜனவரி 2 கிரிகோரியன் ஆண்டின் இரண்டாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 363 (நெட்டாண்டுகளில் 364) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
366 – அலமானி எனப்படும் ஜேர்மனிய ஆதிகுடிகள் ரைன் ஆற்றைக் கடந்து ரோமை முற்றுகையிட்டனர்.
1492 – ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆளுகைக்குட்பட்ட கடைசி நகரமான கிரனாடா சரணடைந்தது.
1757 – கல்கத்தாவை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியது.
1782 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அட்மிரல் எட்வெர்ட் ஹியூஸ் தலைமையில் இந்தியாவில் இருந்து திருகோணமலை நோக்கிப் புறப்பட்டது.
1788 – ஜோர்ஜியா ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 4வது மாநிலமானது.

1791 – ஒகைய்யோ மாநிலத்தில் குழந்தைகள் உட்பட குடியேற்றவாசிகள் 14 பேரை இந்திய ஆதிகுடிகள் படுகொலை செய்தனர்.
1793 – ரஷ்யாவும் புரூசியாவும் போலந்தை பங்கிட்டன.
1818 – பிரித்தானிய குடிசார் பொறியாளர்கள் நிறுவனம் நிறுவப்பட்டது.
1893 – வட அமெரிக்காவில் தொடருந்துப் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
1905 – ரஷ்யக் கடற்படையினர் சீனாவின் போர்ட் ஆதரில் ஜப்பானியரிடம் சரணடைந்தனர்.
1921 – ஸ்பெயினின் சாண்டா இசபெல் கப்பல் மூழ்கியதில் 244 பேர் கொல்லப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: வேல்ஸில் கார்டிஃப் என்ற இடத்தில் லாண்டாஃப் தேவாலய ஜெர்மனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதம் அடைந்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: மணிலா ஜப்பானியரினால் கைப்பற்றப்பட்டது.
1954 – பத்மசிறீ, பத்மபூசண், பத்மவிபூசன் விருதுகள் இந்திய அரசினால் ஏற்படுத்தப்பட்டது.
1955 – பனாமாவின் அதிபர் ஜோசே அன்ரோனியோ ரெமோன் படுகொலை செய்யப்பட்டார்.
1959 – முதலாவது செயற்கைச் செய்மதி, லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1971 – கிளாஸ்கோவில் உதைபந்தாட்ட மைதானம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் உட்பட 66 பேர் கொல்லப்பட்டனர்.
1982 – சோமாலிய அரசுக்கு எதிரான தமது முதலாவது இராணுவ நடவடிக்கையை சோமாலிய தேசிய இயக்கம் தொடங்கியது. சோமாலியாவின் வடபகுதியில் அரசியல் கைதிகளை விடுவித்தனர்.
1993 – யாழ்ப்பாணக் கடல் நீரேரிப் படுகொலை: கிளாலி நீரேரியில் 35-100 பயணிகள் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1999 – விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற பலத்த பனிப்புயலில் சிக்கி 68 பேர் கொல்லப்பட்டனர்.
2004 – ஸ்டார்டஸ்ட் விண்கலம் வைல்டு 2 என்ற வால்வெள்ளியை வெற்றிகரமாகத் தாண்டியது.
2006 – திருகோணமலை மாணவர்கள் படுகொலை: இலங்கையின் கிழக்கே திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் 5 தமிழ் மாணவர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
2006 – மன்னாரில் இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற இலங்கைப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
2008 – விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்தது.
பிறப்புகள்
1873 – லிசியே நகரின் தெரேசா, பிரெஞ்சு கத்தோலிக்கப் புனிதர் (இ. 1897)
1914 – நூர் இனாயத் கான், உருசிய-ஆங்கிலேய உளவாளி (இ. 1944)
1920 – ஐசாக் அசிமோவ், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1992)
1935 – க. நவரத்தினம், ஈழத்து அரசியல்வாதி
1940 – எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன், இந்திய-அமெரிக்கக் கணிதவியலர்
1943 – பாரிசு மான்கோ, துருக்கிய பாடகர், தயாரிப்பாளர் (இ. 1999)
1960 – ராமன் லம்பா, இந்தியத் துடுப்பாளர் (இ. 1998)
1961 – கேணல் கிட்டு, விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினர், தளபதி (இ. 1993)

இறப்புகள்
1782 – கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் – இலங்கையின் கண்டியை ஆண்ட கடைசி அரசன்.
1876 – மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (பி. 1815)
1960 – தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தமிழக வரலாற்று அறிஞர் (பி. 1892)
1876 – மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (பி. 1815)
1960 – தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தமிழக வரலாற்று அறிஞர் (பி. 1892)
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள். நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment