ஆசிரியர் பற்றாக்குறை, கட்டமைப்பு வசதிகள் இல்லை 20 அரசு பாலிடெக்னிக் கல்லூரி மூடப்படும் அபாயம்  சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆசிரியர் பற்றாக்குறை, கட்டமைப்பு வசதிகள் இல்லை 20 அரசு பாலிடெக்னிக் கல்லூரி மூடப்படும் அபாயம்  சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைப்பு

ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கட்ட மைப்பு வசதிகள் இல்லாத காரணங் களால் 20 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 





மேலும், சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. தமிழக உயர்க்கல்வித் துறையின் கீழ் இயங்கும் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் 46 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இதில் 21,000 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர். இன்ஜினீ யரிங் பட்டப் படிப்புகளுக்கு மவுசு குறைந்த போதும் பரவலாக வேலை வாய்ப்புகள் கிடைப்பதால் டிப்ளமோ படிப்புகள் மீதான ஆர்வம் தொடர் கிறது. அதேநேரம் பாலிடெக்னிக் கல்லூரி களின் தரம் தொடர்ந்து சரிவில் பய ணிக்கிறது. துறைத் தலைவர் பணி களில் 100 சதவீதமும், விரிவுரையாளர் பணிகளில் 80 சதவீதமும் காலியிடங் கள் உள்ளன. இந்த அளவு பற்றாக் குறையான ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு முறையாக பாடம் நடத்த முடியாத நிலை நிலவுகிறது. 





இதுதவிர உதவியாளர் உட்பட மற்ற அலுவலகப் பணிகளிலும் 60 சதவீத காலியிடங்கள் உள்ளன. இதனால் அலுவல நிர்வாகம் தொடங்கி மாணவர்கள் கல்வி வரை எல்லாப் பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐடிசிஇ) தமிழக தொழில்நுட்பக் கல்லூரிகளில் சமீபத்தில் ஆய்வு நடத் தியது. முறையான கட்டமைப்பு வசதி கள் இல்லாமல் செயல்படும் 30 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நோட் டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 20 கல்லூரிகளில் அடுத்த ஆண்டு மாண வர் சேர்க்கை மேற்கொள்ளக்கூடாது. மற்ற கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைத் தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளின் பேராசிரியர்கள் கூறும் போது, ‘‘பாலிடெக்னிக் கல்லூரி களை அரசு மாற்றாந்தாய் மனப் பான்மையுடன் நடத்துகிறது. மொத்த முள்ள 46 கல்லூரிகளில் 221 துறைத் தலைவர் பதவிகள் உள்ளன. இவை எல்லாம் கடந்த 4 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. 






 நீண்டகாலமாக விரிவுரையாளர் பணிகளில் 1,100 காலியிடங்கள் உள்ளன. பெரும்பாலும் கவுரவ விரி வுரையாளர்களைக் கொண்டே மாண வர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் குறைந்தது 6 நிரந்தர பேராசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 2 பேர் கூட இருப் பதில்லை. 10 கல்லூரிகளில் முதல்வர் பதவியும் காலியாக இருக்கின்றன. ஆசிரியர் பற்றாக்குறையால் மாண வர்களுக்கு தரமான கல்வி வழங்க முடியாத நிலையே உள்ளது. மேலும், செய்முறை வகுப்புகளை மைய மாகக் கொண்ட டிப்ளமோ படிப்பு களில் போதிய ஆய்வக வசதிகள் இல்லாததால் செய்முறை வகுப்புகள் சரியாக நடத்தப்படுவதில்லை. இதற்கு துறை இயக்குநரகத்தின் மெத்தன போக்கே முக்கிய காரணம். 






கல்லூரி களின் உட்கட்டமைப்பு வசதிகள் மோசமான நிலையில் இருப்பதை சமீபத்திய ஏஐடிசிஇ ஆய்வுகள் அம்பலப்படுத்தின. இதனால் 20 அரசு கல்லூரிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதன்பின்னும் அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் ஏஐடிசிஇ அதிகாரிகளை சரிகட்டுவதில்தான் கவனம் செலுத்துகின்றனர். மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் சிறப்பான அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். குறைந்தபட்ச காலி பணியிடங்களை நிரப்பினாலே நிலைமை சீராகும்’’ என்றனர். துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள். நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment