60 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் ‘சாஸ்த்ரா தொழில்நுட்ப விழா’ சென்னை ஐஐடி-யில் ஜன.3-ல் தொடங்குகிறது - ThulirKalvi Blogs

Latest

Search This Site

60 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் ‘சாஸ்த்ரா தொழில்நுட்ப விழா’ சென்னை ஐஐடி-யில் ஜன.3-ல் தொடங்குகிறது

60 ஆயிரத்துக்கம் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்கும் 'சாஸ்த்ரா' தொழில்நுட்ப விழா சென்னை ஐஐடியில் ஜனவரி 3-ம் தேதி தொடங்குகிறது. 





இதில், தொழில்நுட்ப கண்காட்சி, கருத்தரங்கம், பயிலரங்கம், போட்டி கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. பொறியியல் மற்றும் தொழில் நுட்பம் படிக்கும் மாணவர்களி டம் மறைந்து கிடக்கும் படைப் பாற்றலை வெளிக்கொண்டு வரும் வகையில் சென்னை ஐஐடியில் 'சாஸ்த்ரா' எனப்படும் தொழில்நுட்ப விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 





இவ்விழாவை ஐஐடி மாணவ - மாணவிகளே முன் னின்று நடத்துவார்கள். இந்த ஆண்டு நடத்தப்படுவது 20-வது தொழில்நுட்ப விழா ஆகும். இதுதொடர்பாக ஐஐடி கல்லூரி அல்லாத இதர செயல் பாடுகள் செயலாளரான மாணவர் வம்சி கிருஷ்ணா முலா செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது: 20-வது சாஸ்த்ரா தொழில்நுட்ப விழா ஜனவரி 3 முதல் 6-ம் தேதி வரை 4 நாட்கள் கோலாகலமாக ஐஐடி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாடு, ஆந் திரா, தெலங்கானா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட கல்லூரி களைச் சேர்ந்த சுமார் 60,000 மாணவர் கள் கலந்துகொள்கிறார்கள். ஏரோமாடலிங், வர்த்தகம், புரோ கிராமிங், டிசைனிங், எலெக்ட்ரிக் கல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், உயிரி தொழில்நுட்பம் என 6 வகை களில் இவ்விழா நடைபெறும். இதில், தொழில்நுட்ப கண்காட்சி, கருத்தரங்கம், பயிலரங்கம், போட்டிகள் இடம்பெறுகின்றன. தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் புதிய துறைகளான செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின், விளையாட்டு தொழில் நுட்பம், சட்ட தொழில்நுட்பம் தொடர்பான கருத்தரங்குகள் இந்த ஆண்டு விழாவின் சிறப்பம்சங்கள் ஆகும். சாஸ்த்ரா விழா நிகழ்வு களை www.shaastra.org என்ற இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம் என்றார். 






 ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராம மூர்த்தி கூறும்போது, “சாஸ்த்ரா விழாவை முழுக்க முழுக்க மாண வர்களே முன்னின்று நடத்துகிறார் கள். பேராசிரியர்கள் ஆலோசனை கள் மட்டும் வழங்குவார்கள். மாண வர்களின் கண்டுபிடிப்புத் திறன், படைப்பாற்றலை வெளிப்படுத்த இது ஒரு தளமாக அமையும். இவ்விழாவையொட்டி ஐஐடி வளாக ஆய்வகங்கள் அனைத் தும் திறந்திருக்கும். இங்கு நடை பெறும் ஆய்வுப் பணிகளை பொது மக்கள் பார்வையிடலாம்” என்றார். டீன் எம்.எஸ். சிவகுமார் கூறும் போது, “ஒவ்வொரு பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட்டு 130-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்படும்” என்று குறிப்பிட்டார்.
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள். நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment