தேசிய பள்ளிகள் விளையாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் 64-ஆவது தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக அணி 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
சிறுமியர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் தமிழகத்தின் ஸ்வேதா ஸ்டெப்பி 8-11, 9-11, 7-11 என்ற கேம் கணக்கில் மகாராஷ்டிரத்தின் ஷிரேயா தேஷ்பாண்டேவிடம் தோல்வியுற்று வெள்ளி பதக்கம் வென்றார்.
மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் தமிழக வீராங்கனை வி.கௌஷிகா 11-3, 11-7 10-12, 11-5 என்ற கேம் கணக்கில் மகாராஷ்டிரத்தின் தேஜல் காம்ளேயே வென்று வெண்கலம் வென்றார்.
அணிகள் பிரிவில் தமிழகம் 3-0 என தில்லியை வென்று வெண்கலம் வென்றது.
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment