ஆதாரத்துடன் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்: கல்லூரிகளுக்கு 'நாக்.,' கவுன்சில் ஆலோசகர் அறிவுரை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆதாரத்துடன் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்: கல்லூரிகளுக்கு 'நாக்.,' கவுன்சில் ஆலோசகர் அறிவுரை



''கல்லுாரிகளின் அனைத்துவிதமான செயல்பாடுகளுக்கும், ஆதாரத்துடன் கூடிய பதிவேடுகள் பராமரிக்கப்படவேண்டும்,'' என, கோவையில் நடந்த பயிலரங்கில், 'நாக்' கவுன்சில் ஆலோசகர் பிரியா நாராயணன் பேசினார்.


சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள் நலச்சங்கத்தின் முதல்வர்கள் நல மையம் சார்பில், 'நாக்.,- திருத்தப்பட்ட தரமதிப்பீடு மற்றும் அங்கீகார விதிமுறைகள்' குறித்த ஒரு நாள் பயிலரங்கு, கோவை நீலம்பூர் கதிர் கலை கல்லுாரியில் நேற்று நடந்தது.கருத்தரங்கில், கல்லுாரி முதல்வர்கள் நல பிரிவின் கன்வீனர் டாக்டர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். 


தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மேலாண்மை கல்லுாரிகள் சங்க தலைவர் அஜித்குமார் லால் மோகன் துவக்கி வைத்தார். தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் எனப்படும், 'நாக்' அமைப்பின் ஆலோசகர் பிரியா நாராயணன் தலைமை வகித்து பேசியதாவது:ஒவ்வொரு கல்லுாரியிலும் உள்ள ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை, பிற கல்லுாரிகள் பின்பற்ற முன்வரவேண்டும். புள்ளிவிபரங்கள் மற்றும் தகவல்களை பதிவு செய்வதில் கல்லுாரிகள் அதிக கவனம் செலுத்தவேண்டும். எவ்வித செயல்பாடுகளாக இருப்பினும் அதற்குரிய ஆதார கோப்புகளை வைத்திருந்தால் மட்டுமே, 'நாக்.,' மதிப்பீட்டு ஆய்வுகளின் போது ஏற்றுக்கொள்ள முடியும். ஆதாரமற்ற தகவல்கள் கட்டாயம் நிராகரிக்கப்படும்.கல்லுாரியின் பணிநியமனம், நிகழ்ச்சிகள், மாணவர்கள் சேர்க்கை எதுவாக இருப்பினும் அனைத்திற்கும் தனித்தனி பதிவேடு பராமரிக்கவேண்டியது கட்டாயம்.



தகவல், தொழில்நுட்ப செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். விதிகளை பின்பற்றாமல் இருந்தால், தப்பிக்க முடியாது என்பதை புரிந்து முறையாக கோப்புகளை பராமரியுங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.கருத்தரங்கின் முதல் அமர்வில், உள்கட்டமைப்பு மற்றும் கற்றல் வளங்கள்' என்ற தலைப்பில் மும்பை ஆர்.ஏ போடார் கல்லுாரி முதல்வர் ஷோபனா வாசுதேவன் பேசினார். 



தொடர்ந்து, பாடத்திட்ட வடிவமைப்பு மற்றும் கற்றல் கற்பித்தல் மதிப்பீடு' குறித்து, நாக்., முன்னாள் ஆலோசகர் மதுகர், ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வழிமுறைகள்' என்ற தலைப்பில், மங்களூரு புனித அலோசியஸ் கல்லுாரி முதல்வர் பிரவீன் மார்டீஸ், மாணவர்கள் ஊக்குவிப்பில் தலைமைப்பண்பு மற்றும் மேலாண்மை' என்ற தலைப்பில், கோலாப்பூர் விவேகானந்த் கல்லுாரி முதல்வர் ஹோனேக்கர் பேசினர்.பயிலரங்கில், விழா மலர் வெளியிடப்பட்டது.


தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மேலாண்மை கல்லுாரிகளின் சங்க செயலாளர் சேதுபதி, இணை செயலாளர் பரத்குமார் ஜெகமணி, திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி முதல்வர் ரிச்சல் நான்ஸி பிலிப், நேரு மகா வித்யாலயா கல்லுாரி முதல்வர் சுப்ரமணி, பாரதியார் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் நித்தியானந்தம் உட்பட, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment