டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு முடிவு நேற்று வெளியிடப் பட்டது. நேர்காணல் ஜனவரி 21 முதல் 25-ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவ லர் ஆர்.சுதன் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு:
குரூப் 1 பணிகளில் அடங்கிய துணை ஆட்சியர் (காலியிடங்கள் 29), காவல் துணை கண்காணிப் பாளர் (34), வணிகவரித் துறை உதவி ஆணையர் (8), மாவட்டப் பதிவாளர் (1), மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (5), தீய ணைப்பு, மீட்புப் பணிகள் துறை யில் மாவட்ட அலுவலர் (8) ஆகிய பதவிகளில் 85 காலிப் பணி யிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2017 பிப்ரவரி 19-ம் தேதி நடத்தப்பட்டது.
அதில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 773 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் முதன்மை தேர்வு எழுத 4,199 பேர் தகுதி பெற்றனர். அவர்களுக்கு முதன்மை தேர்வு 2017 அக்டோபர் 13 முதல் 15 வரை 3 நாட்கள் நடந்தது.
இந்நிலையில், எழுத்து தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப் பெண்கள், இடஒதுக்கீடு விதி மற் றும் அந்த பதவிகளுக்கான அறிவிக் கையில் வெளியிடப்பட்ட பிற விதி களின் அடிப்படையில் அசல் சான்றி தழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காண லுக்கு 176 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களது பதிவெண்கள் கொண்ட பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஜனவரி 21 முதல் 25-ம் தேதி வரை நடக்கும். வழக்கம்போல இணையதளத்தில் இதற்கான குறிப்பாணை வெளியிடப்பட்டு, தேர்வு செய்யப்பட்டுள்ளோருக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.
நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment