தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருவதால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் நிச்சயமாக கொடியேற்று நிகழ்ச்சியினை தலைமையாசிரியர்கள் முன்னின்று நடத்த வேண்டும் என்றும் அதில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும் எனவும் தமிழக அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்தாத பள்ளிகள் மீதும், கலந்துகொள்ளாத ஆசிரியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு சிக்கலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து உறுதி செய்திடவும், தற்காலிக ஆசிரியர்கள் கொண்டு பள்ளிகள் தங்குதடையின்றி செயல்பாட்டில் இருப்பதையும் உறுதி செய்திட மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்குழுவினர் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் குடியரசு நாள் கொண்டாட்டத்தினை புறக்கணித்து போராட்டத்தில் தொடர போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இன்று ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கைது செய்து அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை வெளியிடுவதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் என்பவர் அரசின் நடவடிக்கையை கண்டித்து குடியரசு நாள் கொண்டாட்டத்தினை புறக்கணித்து போராட்டத்தில் தொடர போவதாகவும் அறிவித்து உள்ளார்.
இதற்கிடையே ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த போராட்டம் குறித்து முதலமைச்சர் அவர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் ஒரு லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதி பணிக்காக காத்திருக்கும் நிலையில் இருக்கிறார்கள் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் அனைவரும் இதனை மனதில் கொள்ளவேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தினை கைவிட்டு மாணவர்நலன் கருதி பணிக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அரசுப் பிரதிநிதிகளான நாங்கள் கண்ணீர் சிந்துவதை தவிர வேறு வழி இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment