திருச்சி மாவட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் 55 முதன்மை அங்கன்வாடி பணியாளர், 6 குறு அங்கன்வாடி மையப்பணியாளர், 92 அங்கன்வாடி மைய உதவியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. முதன்மை அங்கன்வாடி பணியாளர்: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
31.12.2018 அன்று 25 வயது முடிந்த மற்றும் 35 வயதிற்கு மிகாமலிருக்க வேண்டும். விதவை மற்றும் ஆதரவற்ற விதவை 25 வயது முதல் 40 வயது வரை. மலைப்பகுதி விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி. 20 வயது முதல் 40 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 25 வயது முதல் 38 வயது வரையும் வயது வரம்பாகும்.
குறு அங்கன்வாடி மைய பணியாளர்: 31.12.2018 அன்று 25 வயது முடிந்த மற்றும் 35 வயதிற்கு மிகாதவர்கள். விதவை மற்றும் ஆதரவற்ற விதவை மலைப்பகுதி வசிப்பவர்கள் 25 வயது முதல் 40 வயது வரை. மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு குறைந்தபட்ச வயது 20. மாற்றுத்திறனாளிகளுக்கு 25 வயது முதல் 38 வயது வரை. மலைப்பகுதி வசிப்பவர்களுக்கு 8ம் வகுப்பும், இதர இனங்களுங்கு 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அங்கன்வாடி உதவியாளர்:
இப்பதவிக்கு எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 31.12.2018 அன்று 20 வயது முடிந்து 40 வயதுக்கு மிகாதவர்கள். அதிகபட்ச வயதான 40லிருந்து 5 வருடம் கணவனை இழந்தவர்கள், ஆதரவற்ற விதவை மற்றும் மலை பகுதியில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் சார்ந்த அதே கிராமத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலிருந்து விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் www.icds.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தை நகல் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜன.23 முதல் பிப்ரவரி 11ம்தேதிக்குள் கலெக்டர் அலுவலகம், மாவட்ட திட்ட அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்.🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment