பணிக்கு திரும்பாத அரசு ஊழியர்கள் குறித்த விபரங்களை அனுப்ப வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய்த்துறை ஆணையர் சத்யகோபால் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இரு தினங்களாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வெள்ளிக்கிழமைக்குள் (ஜன. 25) பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை எச்சரித்துள்ளது. இதனை தொடர்ந்து, பணிக்கு திரும்பாத அரசு ஊழியர்கள் குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய்த்துறை ஆணையர் சத்யகோபால் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும், போராட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதால் கஜா புயல் நிவாரண பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment