ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் 171/170 மதிப்பெண் பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் 171/170 மதிப்பெண் பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி

இந்தியாவின் ஐ ஏ எஸ் அதிகாரி அங்குர் கர்க் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் 170 மதிப்பெண்களுக்கு 171 பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். 




 டில்லி ஐஐடியில் படித்து கடந்த 2002 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பட்டம் பெற்றவர் அங்குர் கர்க். இவர் ஐஏஎஸ் பட்டத்தை அவரது 22 ஆம் வயதில் பெற்றார். மிகவும் இளைய வயதில் ஐஏஎஸ் பட்டம் பெற்றவர் என்னும் புகழ் அவருக்கு உண்டு. இவர் தற்போது உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மேக்ரோ எகனாமிக்ஸ் படித்து வருகிறார். உலகப் புகழ் பெற்ற மேக்ரோ எகனாமிக்ஸ் மேதையான ஜெஃப்ரி ஃப்ரான்கேலின் மாணவரான அங்குர் கடந்த மாதம் எழுதிய இறுதித் தேர்வில் 170 மதிப்பெண்களுக்கு 171 பெற்று சாதனை நிகழ்த்தி உள்ளார். இவருக்கு பல்கலைக்கழகம் 101% மதிப்பெண் அளித்துள்ளது. அவர் தனது மதிப்பெண் பட்டியலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தனது தந்தை எப்போதும் 100க்கு 100 மதிப்பெண்கள் வாங்குவது பெருமை இல்லை ஆனால் 101 மதிப்பெண்கள் வாங்குவதே பெருமை எனக் கூறுவதாகவும் தற்போது தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றி விட்டதாகவும் பதிந்துள்ளார் 






 அமெரிக்க மதிப்பெண் முறையின்படி அதிக மதிப்பெண்கள் வழங்கப்படுவது வழக்கம் இல்லை. ஆனால் மிகவும் புத்திசாலியான மாணவர்களுக்கு அதில் விலக்கு அளிப்பதுண்டு. அங்குர் அவ்வகையில் 101% மதிப்பெண் பெற்றுள்ளார். 171/170 marks, 171/170 மதிப்பெண்கள், Ankur garg, harward university, IAS topper, அங்குர் கர்க், ஐஏஎஸ் அதிகாரி, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள். நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment