பார்க்கும் டிவி சேனல்களுக்கு மட்டும் பணம் கட்டினால் போதும்... ட்ராயின் புதிய திட்டம் பிப்ரவரி 1ல் அமல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பார்க்கும் டிவி சேனல்களுக்கு மட்டும் பணம் கட்டினால் போதும்... ட்ராயின் புதிய திட்டம் பிப்ரவரி 1ல் அமல்


TRAI's new broadcasting Cable services framework : கேபிள் டிவி மற்றும் டி.டி.எச் போன்ற தொலைக்காட்சி சேனல்களை வழங்கும் சேவைகள் எப்போதும், நாம் பார்க்காத சேனலுக்கும் சேர்த்தே கட்டணங்கள் வசூலிப்பதுண்டு. 







நாம் மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, மற்றும் இதர மொழிகளில் இயங்கும் செய்தி சேனல்களை ஒரு பொழுதும் பார்த்ததில்லை. ஆனால் அதற்கும் சேர்த்து தான் கட்டணம் கட்டுவோம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) கேபிள் டி.வி. ஒழுங்குமுறைச் சட்டத்தை ஜூலை 3ம் தேதி அறிவித்தது. அதன்படி, மக்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களை மட்டும் தேர்வு செய்து பார்க்கவும், அதற்கான கட்டணத்தை மட்டும் வசூல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் கேபிள் கட்டணம் குறையும். இந்த திட்டத்தினை நிறைவேற்ற கேபிள் டீவி ஆப்ரேட்டர்கள் மற்றும் டி.டி.எச். நிறுவனங்களுக்கு டிசம்பர் 29ம் தேதி வரை காலக்கெடு கொடுத்திருந்தது. TRAI's new broadcasting Cable services framework - சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு ஆனால் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் தரப்பில் இருந்து "பெரும்பாலான மக்கள் இன்னமும் அனலாக் கேபிள்கள் மூலமாகத்தான் டீவி சேனல்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ட்ராயின் புதிய சட்டத்தினை அமலுக்கு கொண்டு வருவதில் நடமுறை சிக்கல்கள் உள்ளது" என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் சென்னையிலேயே 40% வீடுகளுக்கு மட்டும் தான் செட்ஆப் பாக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் இந்த நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். 







ஆனால் ட்ராய் தரப்பில் இருந்து வாதாடிய வழக்கறிஞர் "ட்ராய் காலக்க்டுவினை நீட்டித்திருப்பதாகவும், சுற்றறிக்கை அனைவருக்கும் அனுப்பப்பட்டிருப்பதாகவும் கூறினார்". இதனால் ட்ராய் உத்தரவிற்கு தடை விதிக்க இயலாது என்று நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது. ஆனால் ட்ராய் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை சார்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று விசாரணையை 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர் உயர் நீதிமன்றம். எனவே வழக்கம் போல் கேபிள் டீவிகள் மற்றும் டி.டி,.எச் சேனல்கள் பிப்ரவரி 1ம் தேதி வரை பழைய பிளான்களுக்கு ஏற்றபடியே நீடிக்கும். துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள். நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment