தமிழகத்தில் 18 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ₹30,500 கோடியில் கூடுதலாக 14 தொழிற்சாலைகள்: முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழகத்தில் 18 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ₹30,500 கோடியில் கூடுதலாக 14 தொழிற்சாலைகள்: முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் ₹30,500 கோடியில் கூடுதலாக 14 தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 





முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கடந்த மாதம் 24ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் மற்றும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.இந்நிலையில், ஏற்கனவே அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற 10வது நாளில் மீண்டும் முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று மதியம் 12.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதல்வரின் தனி செயலாளர்கள் கலந்து கொண்டனர். 





அமைச்சரவை கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு அறிவிக்கவில்லை. அதேநேரம், கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து மூத்த அமைச்சர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், தமிழகத்தில் அதிகளவில் தொழில் முதலீடுகளை கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு தொழில் நிறுவனங்களும் புதிய தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் சில தொழிற்சாலைகள் தங்கள் நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவும் அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. 






அப்படி விரிவாக்கம் செய்வது மற்றும் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுத்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அவர்கள் கூறி உள்ளனர். அதேநேரம், அந்த நிறுவனங்கள் சில சலுகைகளையும் தமிழக அரசிடம் எதிர்பார்க்கிறார்கள். அந்த நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது.அதன்படி 14 புதிய தொழிற்சாலைகள் சுமார் ₹30,500 கோடி முதலீடு செய்ய அனுமதி கேட்டுள்ளது. இதன்மூலம் 18 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 






இதற்கான இறுதி ஒப்பந்தம் முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தாகும். ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் 16 நிறுவனங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது என்றார். தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் சில தொழிற்சாலைகள் தங்கள் நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவும் அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment