கல்விக்காக தனியாக ஒரு டிவியை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. வரும் 21ம் தேதி இந்த டிவி தொடங்கி வைக்கப்படுகிறது.
கல்வித்துறை சார்பில் அளிக்கப்படும் பயிற்சிகள் அனைத்தும் இந்த டிவி மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக நீட் பயிற்சியும் இந்த டிவியின் மூலம் நடத்தப்பட உள்ளது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் இந்த டிவி நிலையம் இயங்க உள்ளது. தமிழக அரசின் கேபிள் மூலம் 200 வது எண் கொண்ட காட்சிப் பிரிவில் இந்த டிவியை பார்க்க முடியும்.
இந்த டிவியில் ஒளி பரப்பப்பட உள்ள கல்வி தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் 50 ஆசிரியர்கள் கொண்ட குழு தயாரித்து வருகிறது.
நாள் முழுவதும் இந்த டிவியில் கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் கல்வித்துறை திட்டங்கள் மட்டுமே ஒளிபரப்பாகும். விளம்பரம் ஏதும் இருக்காது. 15 வகையான கல்வி நிகழ்வுகள் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் ஒளி பரப்புவார்கள். மேலும், நீட் தேர்வு, ஐஏஎஸ் பயிற்சி, கணக்காயர் பயிற்சி ஆகியவை இந்த டிவி மூலம் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது. துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment