ஆஸ்திரேலியாவில் 2020-ம் ஆண்டு நடைபெறும் டி 20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆஸ்திரேலியாவில் 2020-ம் ஆண்டு நடைபெறும் டி 20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதல்

ஆஸ்திரேலியாவில் வரும் 2020-ம் ஆண்டு நடைபெறும் ஆடவர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. 




இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 7-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அட்ட வணையை ஐசிசி வெளியிட்டுள் ளது. இந்தத் தொடரில் ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள பாகிஸ்தான், இந்தியா, இங் கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, மேற் கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 




 9-வது இடத்தில் உள்ள இலங்கை, 10-வது இடத்தில் உள்ள வங்கதேசம் ஆகிய அணிகள், இதர 6 அணிகளுடன் தகுதி சுற்றில் மோத உள்ளன. இதில் இருந்து 4 அணிகளும், தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகளும் இணைந்து சூப்பர் 12 சுற்றில் மோதும். இந்த சூப்பர் 12 சுற்றில் உள்ள 12 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. 



இதில் குரூப் 1-ல் நடப்பு சாம்பியனான மேற் கிந்தியத் தீவுகள் அணியுடன், முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான், போட்டியை நடத்தும் ஆஸ்திரே லியா, நியூஸிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த 4 அணிகளுடன் தகுதி சுற்றில் வெற்றி பெறும் இரு அணிகளும் இடம் பெறும். அதேவேளையில் 2007-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி குரூப் 2-ல் இடம் பெற்றுள்ளது. 




இதே பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் உள்ளன. இந்த 4 அணிகளுடன் தகுதி சுற்றில் வெற்றி பெறும் இரு அணிகளும் இடம் பெறும். போட்டிகள் அடிலெய்டு, பிரிஸ் பன், ஜிலாங், ஹோபர்ட், மெல்பர்ன், பெர்த், சிட்னி ஆகிய 7 நகரங்களில் நடைபெறுகிறது. தகுதி சுற்று ஆட்டங்கள் அக்டோபர் 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெறுகின்றன. இதைத் தொடர்ந்து சூப்பர் 12 சுற்று 24-ம் தேதி முதல் தொடங்குகின்றன. 




அன்றைய தினம் நடைபெறும் ஆட்டங்களில் ஆஸ்தி ரேலியா - பாகிஸ்தான் அணிகளும், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணி களும் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை 25-ம் தேதி சந்திக் கிறது. இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் 29-ம் தேதி மோதுகிறது. இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் நவம்பர் 1-ம் தேதி இங்கி லாந்து அணியையும், 5-ம் தேதி தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியையும் சந்திக்கிறது. 




அரை இறுதி ஆட்டங்கள் 11 மற்றும் 12-ம் தேதிகளில் சிட்னி, அடிலெய்டு மைதானத்தில் நடைபெறுகிறது. சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் 15-ம் தேதி மெல்பர்னில் நடைபெறுகிறது. 🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment