மாணவ, மாணவிகளுக்கிடையே பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி 7ம் தேதி தொடக்கம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மாணவ, மாணவிகளுக்கிடையே பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி 7ம் தேதி தொடக்கம்

கிருஷ்ணகிரி, ஜன.3: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகிறது. 




இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளரும், கூடுதல் முதன்மை கல்வி அலுவலருமான மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் 2018-19ம் ஆண்டு சமூக பங்கேற்பு நிகழ்ச்சியில் வரையறுக்கப்பட்டு ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 





அதன் முதல் நிகழ்ச்சியாக பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 மற்றும் சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடத்தில் ஏற்படுத்தும் நோக்கத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், சிறப்பு உண்டு உறைவிடப் பள்ளி மற்றும் உண்டு உறைவிடப் பள்ளி (கேஜிபிவி), ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவர்களிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர்கள் இந்த போட்டிகளில் பங்குபெற்று, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 





அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலமாக மாணவர்கள் போட்டிகளில் பங்குபெற பதிவு செய்ய வேண்டும். மேலும் பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு சார்ந்த தங்களது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி அளவில் வரும் 7ம் தேதி அன்றும், பள்ளி அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் வருகிற 22ம் தேதியன்று மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியிலும் பங்குபெற வேண்டும். வட்டார அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வடடார வளர்ச்சி அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வியில் ஆர்வமுள்ள பிரமுகர்கள் மூலமாகவும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் முதல் 3 இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரால் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். 







எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், சிறப்பு உண்டு உறைவிடப்பள்ளி மற்றும் உண்டு உறைவிடப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் பங்குபெற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள். நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment