வருகைப்பதிவு திட்டம் தொய்வு :பள்ளிகளில் ஆய்வுக்கு உத்தரவு
கோவை:மொபைல் போன் செயலியில் வருகைப்பதிவு மேற்கொள்ளும் திட்டம் தொய்வடைந்துள்ளதால், பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளுமாறு, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர், ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் போன் மூலம் வருகைப்பதிவு மேற்கொள்ளும் விதமாக, 'டிஎன் அட்டென்டன்ஸ்' என்ற பிரத்யேக 'ஆப்', கடந்த அக். மாதம் வெளியிடப்பட்டது.
இதில், காலை, மதியம் ஆகிய இருவேளைகளில், வருகை புரியாதோர் தகவல் பதிவேற்ற வேண்டும்.சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இச்செயலியில், சில தொழில்நுட்ப குளறுபடி இருந்ததால், பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள, கடந்த நவ., மாதம் உத்தரவிடப்பட்டது. தற்போது சிக்கல்கள் களையப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
Please Comment