Science technology - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Science technology

அறிவியல் தொழில்நுட்ப மைய துணைத்தலைவராக மயில்சாமி அண்ணாதுரை நியமனம்




சென்னை : தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் துணைத்தலைவராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 



பெங்களூரூ இஸ்ரோ மைய இயங்குனராக பணியாற்றி, சந்திரயான்-1 விண்கலத்தை நிலவுக்கு செலுத்தியதில் முக்கிய பங்காற்றியவர் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்ற மயில்சாமி அண்ணாதுரைக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.




இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையிடம் இருந்து இஸ்ரோவில் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் ஏதேனும் ஒரு பதவி அல்லது ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி வழங்குமாறு தமிழக அரசுக்கு கடிதம் வந்தது.

No comments:

Post a Comment

Please Comment