அரசு ஊழியர், ஆசிரியர் வேலைநிறுத்தம் தொடரும் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசு ஊழியர், ஆசிரியர் வேலைநிறுத்தம் தொடரும் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இன்றைக்குள் (வெள்ளி) பணிக்கு திரும்ப வேண்டும் என்று உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் திட்டமிட்டபடி தொடரும் என ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது. 



 அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்து வது, 7-வது ஊதியக்குழு ஊதியத் தின் 21 மாத கால நிலுவைத் தொகையை வழங்குவது என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பான ஜாக்டோ- ஜியோ கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கடந்த செவ்வாய்க் கிழமை தொடங்கியது. முதல் நாள் தாலுகா அளவிலான ஆர்ப் பாட்டத்திலும், 2-வது நாள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்ட னர். 




இப்போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்களிலும், அரசு பள்ளிகளிலும் பணிகள் முடங்கின. இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர் கள் 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் புதன் கிழமை உத்தரவிட்டது. இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்ட மும் சாலை மறியல் போராட்டமும் நடந்தன. இந்தச் சூழ்நிலையில், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங் கிணைப்பாளர்களின் அவசர கூட்டம் சென்னை திருவல்லிகேணியில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூறியது: 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் காலவரை யற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும். 



ஏற்கெனவே அறிவிக் கப்பட்டபடி வெள்ளிக்கிழமை (இன்று) மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும். 28-ம் தேதி முதல் போராட்டத்தின் வடிவம் நாளைமேலும் தீவிரப்படுத்தப்படும். எனவே, தமிழக அரசு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். எங்கள் சங்கத் தில் இணைந்துள்ள ஆசிரியர் சங்கங் கள் போராட்டத்தை தொடரும். ஜாக்டோ ஜியோ தொடர்ந்துள்ள வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 28-ம் தேதி விசார ணைக்கு வர உள்ளது. 




அதைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை அமைந்திருக்கும் என்றனர்.ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் ஜாக்டோ - ஜியோ போராட் டம் காரணமாக பணிக்கு வரா மல் வேலைநிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களி டம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணை யில், ‘‘ஆசிரியர்கள் போராட்டத் தால் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளன. 



பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தேவை யான இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவாகியுள்ளது. அதன்படி ஓய்வுபெற்ற ஆசிரியர் அல்லது தகுதியான பட்டதாரிகளை ரூ.7,500 சம்பளத்தில் தற்கா லிக ஆசிரியர்களாக நியமித்துக் கொள்ளலாம். 



வரும் 28-ம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர் கள் பள்ளிகளில் பணிபுரிய லாம்’’ என்று கூறப்பட்டுள்ளது🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment