தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வரி வருவாய், இழப்பீட்டு நிலுவைத் தொகை ரூ.7,214 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
l தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்.
l தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்களை மூடும் முடிவை கைவிட வேண்டும்.
l தொழில் முனைவோர் தொழில் தொடங்க வும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வும் புதிய கொள்கை வெளியிடப்படும்.
l விமான சாதனங்கள், பாதுகாப்பு தளவாடங் கள் தயாரிப்பை ஊக்குவிக்க தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள் கையை அரசு விரைவில் வெளியிடும்.
l மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத் துவமனை அமைக்க ரூ.1,264 கோடியை அனுமதித்த மத்திய அரசுக்கு நன்றி.
l வாகன உற்பத்தித் துறையில் தமிழகம் முக்கிய மையமாக விளங்கும் நிலையில், அடுத்த தலைமுறை மின்சார வாகனங்கள் தயாரிப்பதை ஊக்குவிக்க சிறப்புச் சலுகைகளுடன் கவனம் செலுத்தப்படும்.
l சென்னை, கோவை, மதுரை மாநகரங்களில் சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சார பேருந்துகள் இயக்கப்படும்
l சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக்கழகச் சட்டம் மற்றும் விதிகளுக்கு ஜன. 16-ம் தேதி அறிவிக்கை வெளியிடப்படும்.
l ரூ.1,652 கோடியில் செயல்படுத்தப்படும் அத்திக்கடவு - அவிநாசி திட்ட ஒப்பந்தப்புள் ளிகள் கோரும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார்.
l அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு சாதகமாக பரிசீலிக்கும் என நம்புகிறேன்.
l பழங்குடியினர் பகுதியில் பள்ளிகள் தொடங்கும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க புதிய திட்டம் வகுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.
ஆளுநர் தனது ஆ்ங்கில உரையை காலை 10.50 மணிக்கு முடித்தார். அதைத் தொடர்ந்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் பி.தனபால் வாசிக்கத் தொடங்கி, காலை 11.50 மணிக்கு முடித்தார். அத்துடன் பேரவை நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. இதையடுத்து, பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடியது. அதில், பேரவையை வரும் 8-ம் தேதி வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment