‘இந்து தமிழ்’ நாளிதழ், ‘ஸ்பைரோ’ பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் ‘தேர்வுக்கு வழிகாட்டி’ வழிகாட்டு நிகழ்ச்சி சென்னை லயோலா - ஐசிஏஎம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் & டெக்னால ஜியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி-6) நடைபெற உள்ளது.
பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நீட் மற்றும் ஐஐடி, ஜெஇஇ தேர்வுகளில் வெற்றிபெற வேண்டுமென்று விரும்புவார்கள். ஆனால், தேர்வுக்கு தம்மை எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும், வெற்றி பெறுவதற்மான வழிமுறைகள் என்ன என்பதை அறியாமல் இருப்பார்கள். அவர்களுக்கு தெளிவை ஏற்படுத் தும் வகையில் ‘தேர்வுக்கு வழிகாட்டி’ என்ற நிகழ்ச்சி நடத் தப்படுகிறது.
சென்னை, காஞ்சிபுரம் மாவட் டங்களைச் சேர்ந்த மாணவ -மாணவிகளுக்காக நடத்தப்படும்
இந்நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக் கத்திலுள்ள லயோலா - ஐசிஏஎம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் & டெக்னாலஜியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி-6) நடைபெற உள்ளது.
இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் அனுபவம் வாய்ந்த கல்வியா ளர்கள் பங்கேற்று, தங்கள் அனுபவங்களையும் ஆலோசனை களையும் வழங்க இருக்கிறார்கள். நீட் தேர்வு குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் வல்லுநர்கள் தெளிவான விளக்கங்களையும் அளிக்க உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் பிளஸ் 2 முடித்த மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 படித்து வரும் தமிழ்/ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் பங்கேற்கலாம். மேலும், ஸ்காலர்ஷிப்புக்கு தேர்வு செய்யப்படும் 100 பேருக்கு இலவசப் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
இதில் பங்கேற்க விரும்புவோர் 7338884137 என்ற செல்போன் எண்ணுக்கு, தங்களது பெயர், பள்ளியின் பெயர், தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களைக் குறுந்தகவலாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி, பதிவு செய்துகொள்ள வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்போது மாதிரித் தேர்வுக்கான பதிவுக் கட்டணம் ரூ.150/-ஐ நேரில் செலுத்த வேண்டும்.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment