சென்னையில் 10-ம் தேதி  அகில இந்திய வானொலி கவிதை அரங்கம் பல்வேறு மாநில கவிஞர்கள் பங்கேற்கின்றனர்  - ThulirKalvi Blogs

Latest

Search This Site

 சென்னையில் 10-ம் தேதி  அகில இந்திய வானொலி கவிதை அரங்கம் பல்வேறு மாநில கவிஞர்கள் பங்கேற்கின்றனர் 



பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கவிஞர்கள் பங்கேற்கும் அகில இந்திய வானொலி கவிதை அரங்க நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 10-ம் தேதி நடக்கிறது. 







 தேசிய ஒருமைப்பாட்டையும், மொழி நல்லிணக்கத்தையும் வளர்க்கும் வகையில் அகில இந்திய வானொலி சார்பில் ஆண்டுதோறும் கவிதை அரங்க நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கவிஞர்கள் தங்கள் கவிதைகளை வாசிப்பார்கள். அந்த வகையில் 2019-ம் ஆண்டுக்கான கவிதை அரங்க நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 10-ம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. 





இந்நிகழ்ச்சியை அகில இந்திய வானொலி இயக்குநர் ஜெனரல் பயாஸ் ஷேக்ராயர் முன்னிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார். இதில், இந்திய அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளைச் சேர்ந்த கவிஞர்கள் தெரிவு செய்யப்பட்ட தங்கள் கவிதைகளை வாசிக்கிறார்கள். அந்தக் கவிதைகளின் இந்தி மொழிபெயர்ப்பும் தொடர்ந்து வாசிக்கப்படும். பிறமொழி கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ராஜேந்திரன், சாகித்ய அகாடமி விருது பெற்ற திலகவதி, இந்திரன் ஆகியோர் வாசிக்கின்றனர். தமிழ் மொழிபெயர்ப்பு இந்நிகழ்ச்சி, குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் (25-ம் தேதி) இரவு 10 மணிக்கு அகில இந்திய வானொலியிலும் அதன் மண்டல நிலையங்களிலும் ஒலிபரப்பு செய்யப்படும்.







 வெவ்வேறு இந்திய மொழிகளில் வாசிக்கப்படும் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு, குடியரசு தினத்தன்று (26-ம் தேதி) இரவு 10 மணிக்கு சென்னை அகில இந்திய வானொலியின் நுண்ணலை வரிசையில் (720 கிலோஹெர்ட்ஸ்) அகில பாரத கவி சம்மேளனம் என்ற தலைப்பில் ஒலிபரப்பாகும். இந்நிகழ்ச்சியை டிடிஎச், எப்எம் கோல்டு-100.1 மெகா எம்எச்இசட் அலைவரிசையிலும் ‘ஆல் இந்தியா ரேடியோ லைவ்’ என்ற செயலியிலும் கேட்டு ரசிக்கலாம். 







மேலும், அகில இந்திய வானொலியின் இணையதளத்திலும் (www.allindiaradio.gov.in) கேட்டு மகிழலாம்.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment