பிளஸ் 1 மாணவர்களுக்கு அகமதிப் பீடு மதிப்பெண் வழங்காதது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் களிடம் பள்ளி கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு அமல் செய்யப்பட்டது. அப்போது ஒவ்வொரு பாடத்துக் கும் தேர்வு மதிப்பெண் 200-ல் இருந்து 100 ஆக குறைக்கப் பட்டது.
மேலும், பாடவாரியாக 10 மதிப் பெண் அகமதிப்பீடாக வழங்கப் படுகிறது. தொழிற்கல்வி பாடங் களுக்கு தலா 25 மதிப்பெண் அகமதிப்பீடாக தரப்படுகிறது.
இதற்கிடையே கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்ச்சியில் பெரும் பாலான மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களே பெற்றனர். இதுகுறித்து ஆய்வு நடத்திய போது பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் கடினமாக இருந்தது முக்கிய காரணமாக கூறப்பட்டது.
மேலும், 20 சதவீதம் பேருக்கு அக மதிப்பீடு மதிப்பெண் வழங்கப் படாததாலும் மாணவர்களின் மதிப் பெண் குறைந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.
பள்ளி வருகைப்பதிவு 75% இருந்தாலே மாணவருக்கு கட்டா யம் ஒரு மதிப்பெண் அகமதிப் பீடாக வழங்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட் டிருந்தது. அதை மீறி பல மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அகமதிப்பீடு வழங்காமல் இருந் துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் விளக்கம் கேட்டு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment