வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வெள்ளிக்கிழமை (நாளை) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இந்த முகாம், கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். இதில், 8-ம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, பாலிடெக்னிக் டிப்ளோமா, கலை அறிவியல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். வயது 35-க் குள் இருக்க வேண்டும். இம்முகா மில் 10-க்கும் மேற்பட்ட நிறுவ னங்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங் களுக்கு ஆட்களை தேர்வுசெய்ய உள்ளன.
No comments:
Post a Comment
Please Comment