குஜராத் பள்ளி கூட வகுப்பறையில் புது வருட தொடக்கத்தில் இருந்து மாணவ மாணவிகள் 'உள்ளேன் ஐயா' என்று சொல்வதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் என கூற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது
.
குஜராத்தில் கல்வி மந்திரி புபேந்திரசின்ஹ் சுதாசமா நடத்திய ஆய்வு கூட்டத்தின் முடிவில் புதிய உத்தரவு பிறப்பிக்க முடிவானது. இதனை தொடர்ந்து குஜராத் முதன்மை கல்வி இயக்ககம் மற்றும் குஜராத் மேனிலைப்பள்ளி கல்வி வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
குஜராத் அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், மாநிலம் முழுவதுமுள்ள அரசு அல்லது தனியார் பள்ளிகளில் படிக்கும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மற்றும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவிகள், வருகை பதிவின்பொழுது உள்ளேன் ஐயா அல்லது ஆம் ஐயா என கூறுவதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் அல்லது ஜெய் பாரத் என்று கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவானது புது வருட தொடக்க நாளான ஜனவரி 1, 2019 முதல் நடைமுறைக்கு வரும். இதனை அனைத்து கல்வி அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.
நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment