பள்ளிகளில் காவல் மாணவர் படை தொடக்கம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பள்ளிகளில் காவல் மாணவர் படை தொடக்கம்

மாணவ, மாணவியருக்கு காவல் துறை, குற்றம் மற்றும் சட்ட விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் காவல்-மாணவர் படை தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி தெரிவித்தார். 




 திருவள்ளூரில் உள்ள தனியார் அரங்கத்தில் மாவட்ட காவல் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில், பள்ளிகளில் காவல் மாணவர் படை தொடங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி கலந்து கொண்டு பேசியது: இந்த மாவட்டத்தில் காவல் துறையும்-பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 8, 9-ஆம் வகுப்பு மாணவ, மாணவியரைக் கொண்டு காவல் மாணவர் படையை உருவாக்கியுள்ளோம். இதேபோல் இம்மாவட்டத்தில் 132 பள்ளிகளில் தொடங்க முடிவு செய்து, அதில் முதல் கட்டமாக 32 பள்ளிகளில் இப்படை தொடங்கப்பட்டுள்ளது. இந்த காவல் மாணவர் படையை ஒவ்வொரு பள்ளியிலும் முழு அளவில் இயங்கச் செய்ய வேண்டும். இதன் மூலம் காவல் துறையின் பணிகள், சட்டம் ஒழுங்கு பராமரித்தல் குறித்து மாணவ, மாணவியர் அறிந்து கொள்ள முடியும். சமுதாய தீமைகள், குற்றங்கள் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் பாலியல் துன்பங்களில் இருந்து குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் அது தொடர்பான தகவல்களை அளிக்க வேண்டும். இதை அடிப்படையாகக் கொண்டுதான் பள்ளிகள் தோறும் காவல் மாணவர் படை உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். 





இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திருவரசு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் 32 பள்ளிகளைச் சேர்ந்த 650 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள். நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment