கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெறுவோம் என கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நேற்று உறுதிமொழி ஏற்றனர்.
கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கலெக்டர் கே.எஸ். கந்தசாமி அரசு பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவிதம் உயர்வதற்கும், அதிக மதிப்பெண் பெறுவது குறித்தும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.பின்னர், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்தி எங்கள் பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்ப்போம் என்ற உறுதிமொழியினை கலெக்டர் தலைமையில் ஏற்றனர்.
தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களுடன் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் உயர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் நூலகம் மற்றும் பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டிற்கான பாடப்புத்தகங்களை வழங்கி பள்ளி வளாகத்தில் மாணவர்களுடன் மரக்கன்று நட்டார்.
பின்னர், மாணவர்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.இதையடுத்து, கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் தாசில்தார் அலுவலகத்தை பார்வையிட்டு பணிகளின் விபரங்களை கேட்டறிந்தார்.இதில் மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வம், பள்ளி துணை ஆய்வாளர் குமார், பள்ளி தலைமையாசிரியர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லட்சுமி நரசிம்மன், தாசில்தார் ஜெயபிரகாஷ் நாராயணன், செயல் அலுவலர் கணேசன், வட்டார கல்வி அலுவலர்கள் மோகன், ராமுலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.
நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment