காஞ்சிபுரம்:மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், அடையாள அட்டை கட்டாயம் அணிய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, வருவாய் துறையினருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.அரசு ஊழியர்கள் பணி நேரத்தில், அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என, ஏற்கனவே விதிகள் உள்ளன. ஆனால், பெரும்பாலான அரசு அலுவலகங்களில் பின்பற்றப்படுவதில்லை.இந்த நடைமுறையை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதற்காக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய் துறை அலுவலர்களுக்கு, அந்த துறையினரே அடையாள அட்டை தயார் செய்து வழங்கியுள்ளனர்.ஆட்சியர் கையொப்பமிட்டு, ஊழியரின் புகைப்படம் உள்ளிட்ட விபரங்கள், அடையாள அட்டையில் இடம் பெற்றுள்ளன.
அனைத்து தாலுகாக்களிலும், வருவாய் துறை ஊழியர்கள், அடையாள அட்டை அணிந்து பணியாற்ற, மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.வருவாய் துறையை தொடர்ந்து, ஊரக வளர்ச்சித் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை, உணவு வழங்கல் துறை உள்ளிட்ட பிற துறையினரும் அடையாள அட்டை அணிய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.
நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment