தனிநபர்களுக்கு குற்றப்பின்னணி இல்லை என்பதற்கான நற்சான்றை ஆன்லைனில் பெறும் வசதி தொடக்கம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தனிநபர்களுக்கு குற்றப்பின்னணி இல்லை என்பதற்கான நற்சான்றை ஆன்லைனில் பெறும் வசதி தொடக்கம்

குற்றப்பின்னணி இல்லை என காவல் துறையினர் வழங்கும் தனிநபர் நற்சான்றிதழை ஆன்லைனில் பெறும் வசதியை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று தொடங்கி வைத்தார். 




 குற்றப்பின்னணி உடைய சிலர் வெளியிடங்களுக்கு சென்று, தங்கள் மீதுள்ள குற்றங்களை மறைத்து, புதிய வேலைகளில் சேர்ந்து மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்கும் வகையில் புதிதாக பணிக்கு சேர்பவர்கள், தங்கள் மீது குற்ற வழக்குகள் ஏதும் இல்லை என சான்று பெற்ற பின்னரே அவர்களை பணியில் சேர்க்க வேண்டுமென போலீஸார் அறிவுரை கூறிவந்தனர். இந்த சான்று தேவைப்படுபவர்கள் காவல் ஆணையர் அல்லது கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ரூ.1,000 செலுத்தி தங்கள் மீது வழக்கு ஏதும் இல்லை என சான்று பெற்று வந்தனர். இந்நிலையில் இதை எளிமைப்படுத்தி, ஆன்லைன் மூலம் 15 நாளில் நற்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 




 இப்புதிய சேவைக்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் காவல் இயக்குநர் சீமாஅகர்வால் ஆகியோர் புதிய இணையதள சேவையை தொடங்கி வைத்தனர். கூடுதல் ஆணை யர்கள் மகேஷ்குமார் அகர்வால், ஆர்.தினகரன், ஏ.அருண், காவல் இணை ஆணையர்கள் பாபு, வி.பாலகிருஷ்ணன், ஆர்.சுதாகர் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். தனிநபர் விவரம் சரிபார்ப்பு, வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வாடகைதாரரின் விவரம் சரிபார்ப்பு, வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு ஆகிய சேவைகளுக்காக பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 



 மேற்படி சேவையை பயன்படுத்துவதற்காக தனிநபர் ஒரு விண்ணப்பத்துக்கு ரூ.500, தனியார் நிறுவனங்கள் ஒரு விண்ணப் பத்துக்கு ரூ.1,000 கட்டணம் செலுத்தவேண்டும். காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவையின் முக்கிய நோக்கம் என்ன வெனில், விவரம் சரிபார்க்கப்பட வேண்டிய தனிநபர் ஒரு வரின் தற்போதைய வீட்டு முகவரி மற்றும் தமிழக காவல் துறையின் வசம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், மேற்படி நபர் ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளரா என்ற விவரம் சரிபார்க்கப்படும். தமிழகத்தில் வசிப்பவர்கள் பற்றிய விவரங்கள் மட்டும் இச்சேவையின் மூலம் சரிபார்க்கப்படும். 





விண்ணப்பம் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் காவல் முன் நடத்தை சரிபார்ப்பு பணி முடிக்கப்படும். விண்ணப்பத்தில் அளிக்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தால் மேற்படி விண்ணப்பமானது நிராகரிக்கப்படும். அதற்காக செலுத்தப்பட்ட கட்டணத் தொகையும் திருப்பி அளிக்கப்படாது. மேலும், காவல் துறைக்கு தவறான விவரங்கள் அளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment