கருவிலேயே சிசுவை கண்காணிக்கும் நவீன கருவி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கருவிலேயே சிசுவை கண்காணிக்கும் நவீன கருவி



குழந்தை கருவில் இருக்கும் போது, அவற்றின் நலன் குறித்த தகவல்ளை அறியும் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 




 இந்த கருவியை தாயின் வயிற்றில் பொருத்திவிட்டால் போதும். குழந்தையின் நாடித் துடிப்பு கண்டறிவது, நாடித் துடிப்பை பதிவு செய்வது, நலம் குறித்த அறிவிப்புகள், எத்தனை முறை குழந்தை காலால் உதைத்தது என்ற தகவல், குழந்தை எந்த பக்கம் உறங்குகிறது என்ற தகவல்களை கையில் இருக்கும் ஸ்மார்ட் போனுக்கு இந்த கருவி தெரிவித்துவிடும்







.இந்த கருவி தயாரிப்பு நிறுவனத்துக்கு உலக அளவிலான இரு விருதுகள் கிடைத்துள்ளது. இந்த கருவியில் துணியைப் போன்று சென்ஸார் கருவி இணைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் அசைவுகளை ஸ்மார்ட் போனுக்கு அனுப்பும் இந்த கருவி, ஒரு முறைக்கு மேல் கருவுறும் தாய்மார்களுக்கு பேருதவியாக உள்ளது. இந்த கருவியின் துல்லியம் மற்றும் பயன்பாடு குறித்து கொலம்பியா மருத்துவ மையத்தில் பரிசோதிக்கப்பட்டு, நியூ வேலட் கேர் மையத்துக்கு நற்சான்று தரப்பட்டுள்ளது. 







300 கர்ப்பிணிப் பெண்களிடம் சோதனை நடத்தி, இந்த கருவியின் செயல்பாட்டை உறுதி செய்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். new band pregnancy, குழந்தை அசைவை கண்டறிய கருவி, ஸ்மார்ட் போனுக்கு தகவல் துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment