சீனாவின் தென்பகுதியில் உள்ள குயிஷூ மற்றும் குயான்சி பகுதிகளில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக, குழந்தைகளின் சீருடைகள் நவீன முறையில் தயார் செய்யப்பட்டுள்ளது.
அதாவது அங்கு பள்ளிமாணவர்கள் அணியும் ஜாக்கெட்டின் இரு தோள்பட்டைகளிலும் 2 மைக்ரோசிப்கள் வைத்துத் தைக்கப்பட்டுள்ளது . இதன் மூலம் குழந்தைகள் பள்ளியில் நுழைந்தவுடன் மைக்ரோசிப்கள் அவர்களை போட்டோ அல்லது வீடியோ எடுக்க உதவும்.
மேலும் பள்ளியில் இருந்து குழந்தைகள் வெளியேறினால் வகுப்பறையில் அலாரம் அடிக்கும். குழந்தைகள் காணாமல் போனால் மைக்ரோசிப்கள் மூலம் அவர்களை கண்டறிய முடியும்.
அதுமட்டுமின்றி மைக்ரோசிப்கள் மூலமாக குழந்தைகளின் நடவடிக்கையை முழுவதும் கண்காணிக்க முடியும். ஆசிரியர் பாடம் நடத்தும்போது குழந்தைகள் தூங்கினாலும் அலாரம் அடிக்கும் வகையில் சீருடை வடிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் வீட்டிலிருந்தே பெற்றோர்கள் செல்போனில் உள்ள 'ஆப்' மூலம் பள்ளியில் உள்ள தங்களது குழந்தைகளின் நடவடிக்கையை அறிய முடியும்.
இதற்கு சீனாவில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment