'சிறந்த ஆசிரியர்களை பாடம் நடத்த வைத்து, அதை படம் பிடித்து, 'யு டியூப்'பில் பதிவேற்றம் செய்ய, நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - ராஜாகிருஷ்ணன்: அந்தியூர் தொகுதி, பொலவளக்காளிபாளையம் ஊராட்சியில் உள்ள, கிளை நுாலகத்திற்கு, புதிய கட்டடம் கட்ட, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர், செங்கோட்டையன்: விரைவில் கட்டி தரப்படும்.தி.மு.க., - தங்கம் தென்னரசு: சென்னையில், புத்தகக் கண்காட்சி நடக்கிறது. தமிழில், புதிய நுால்கள் வெளிவர, பதிப்பகத்தாரை ஊக்குவிக்க வேண்டும்.புதிய நுால்களை, நுாலகங்களுக்கு கொள்முதல் செய்ய, தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளதா; சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்திற்கு, புதிய நுால்கள் வாங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
அமைச்சர், செங்கோட்டையன்: பதிப்பகங்களில் இருந்து, புதிய நுால்கள் வாங்க, குழு அமைக்கப்பட்டுள்ளது.புதிய நுால்களை கொள்முதல் செய்ய, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணா நுாற்றாண்டு நுாலகத்திற்கு நுால்கள் வாங்க, ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு, ஸ்டுடியோவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.அந்த ஸ்டுடியோவில், சிறந்த ஆசிரியர்களை பயன்படுத்தி பாடம் நடத்தி, அதை வீடியோவில் பதிவு செய்து, 'யு டியூப்' வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய, முடிவு செய்துள்ளோம்.
பள்ளி மாணவர்கள், தங்கள் மொபைல் போன்களில், அவற்றை பதிவிறக்கம் செய்து படிக்கலாம். 'சிடி'யாக வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.அதேபோல், ஓலைச்சுவடிகளில் உள்ளதை, புத்தகமாகவும், 'சிடி'யாகவும் வெளியிட, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment