பணிக்குத் திரும்பாத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை : ஆட்சியர் எச்சரிக்கை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பணிக்குத் திரும்பாத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை : ஆட்சியர் எச்சரிக்கை

தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு சனிக்கிழமை அவரவர் தலைமையிடத்தில் கட்டாயம் பணியில் ஈடுபட வேண்டும். இதில் தவறும் பட்சத்தில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் எச்சரித்தார். 





 இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நடத்தும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சங்கங்களில் உள்ள அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் வேலை நிறுத்தம் நடத்தி வருகின்றனர். 




இதனால் பள்ளிகளில் மாணவ, மாணவியரின் ரிவிஷன் தேர்வுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பிப்ரவரி மாதம் மேல்நிலை செய்முறைத் தேர்வு மற்றும் கருத்தியல் தேர்வுகளும் நடைபெற உள்ளன. இதுபோன்ற பணிகளை செம்மையாக முடிப்பது என்பது தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் கடமையாகும். அதேபோல் தேர்வுக்கான ஆய்வகங்கள், தேர்வு மையப் பள்ளிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து முறையாகத் திட்டமிட வேண்டியுள்ளது. 




எனவே, மாணவ, மாணவியரின் நலன் மற்றும் அவர்களின் உயர்கல்வி வாய்ப்பை மனதில் கொண்டு, தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து வகை ஆசிரியர்களும் வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும். இதை மீறும் பட்சத்தில் தமிழ்நாடு குடிமைப் பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்படி துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment