ஆசிரியர்கள் போராட்டம் தொடர்வதால் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் தொகுப்பூதியம் 7500 ரூபாயிலிருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டு ஆணை பிறக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 13 லட்சம் பேர் உள்ளனர்.
இவர்களில் 8 லட்சம் பேர் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வழக்கமான பணிகள் முடங்கியுள்ளன. தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப்பள்ளிகள் கடந்த 4 நாட்களாக மூடப்பட்டுள்ளன.
அரசு பள்ளியில் ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் தற்காலிக ஆசிரியை அப்படி தேர்வு செய்யப்படும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7,500 சம்பளம் வழங்கலாம் என்றும் அரசாணை வெளிடப்பட்டது.
இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்த ரூ.7500 லிருந்து 10 ஆயிரமாக உயர்த்தி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment