மாணவர்கள் சிறந்த அறிவியல் அறிஞர்களாக உருவாக வேண்டும் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மாணவர்கள் சிறந்த அறிவியல் அறிஞர்களாக உருவாக வேண்டும்

வரும் காலங்களில் இந்தியாவில் பல்வேறு புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளை கண்டறியும் வகையில் சிறந்த அறிவியல் அறிஞர்களாக விளங்க வேண்டும் என கண்காட்சியில் கலெக்டர் பேசினார்.





புதுக்கோட்டை தனியார் பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்து பேசியதாவது: கண்காட்சியில் உயிரிகள், உணவு, கணிதம் உள்ளிட்ட 8 அறிவியல் தலைப்புகளில் மாணவ, மாணவிகளின் அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 90 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவர்கள் தங்களது படைப்புகளுடன் கலந்து கொண்டுள்ளனர். 





கண்காட்சியில் ஒவ்வொரு தலைப்புகளிலும் வெற்றி பெறும் தலா 3 நபர்களுக்கு பரிசு கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன், முதல், இரண்டாம், மூன்றாம் பரிசு களாக தலா ரூ.1,500, ரூ.1,000, ரூ.500 ரொக்க பரிசும் வழங்கப்படும். மாணவர்கள் இதுபோன்ற அறிவியல் கண்காட்சிகளில் அதிக அளவு கலந்து கொண்டு தங்களது அறிவியல் திறமை வளர்த்து கொள்ள வேண்டும். இதன்மூலம் வரும் காலங் களில் இந்தியாவில் பல்வேறு புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளை கண்டறியும் வகை யில் சிறந்த அறிவியல் அறிஞர்களாக விளங்க வேண்டும் என்றார்.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment