சம வேலை-சம ஊதியம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 7 வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜாக்டோ-ஜியோ என்பது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய கூட்டமைப்பாகும்.
இவர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துவதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. அரசு சேவைகளும் பாதிக்கப்படுகிறது.
இதனிடையே, எங்ககளது கோரிக்கையை அரசு நிறைவேற்றினால் போராட்டம் நடத்தமாட்டோம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாக்டோ ஜியோ வாக்கு உறுதி கொடுத்து இருந்தது.
இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கொடுத்த உறுதியை ஜாக்டோ ஜியோ அமைப்பு திரும்ப பெற்றது.
வரும் 22 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பழைய ஓய்வூதியம், ஊதிய முரண்பாடு, 21 மாத நிலுவைத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்ட நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ தெரிவித்தது. துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment