அடுத்தடுத்து அதிரடி காண்பிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்..! எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சி..! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அடுத்தடுத்து அதிரடி காண்பிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்..! எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சி..!

80 ஆயிரம் இலவச மடிக்கணினியை ஆசிரியர்களுக்கு விரைவில் வழங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு கல்வித்துறையில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார்.




புதிய பாடத்திட்டம் முதல் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு வரையிலும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


அதுமட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளுக்கு இணையாக தற்போது அரசு பள்ளிகளிலும் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் இந்த மாதம் முதல் தொடங்கப்பட்டு உள்ளதால் அந்த வகுப்புகளுக்கு தேவையான காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப உள்ளதாகவும், அதற்காக தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களை பணியமர்த்த உள்ளதாகவும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இதன்மூலம் படித்துவிட்டு, அரசு வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர்கள அரசு வேலை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


அதேவேளையில் ஆசிரியர்களுக்கு மிக விரைவில் வழங்க உள்ள லேப்-டாப் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க தேவையான பாட குறிப்புகளை மிக எளிதாக இணையத்தில் இருந்தே எடுத்துக் கொள்ளலாம்.அமைச்சர் செங்கோட்டையனின் அடுத்தடுத்து நடவடிக்கையால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளார்.மாணவ மாணவிகளும் உற்சாகத்தில் உள்ளனர்.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment